ஈராக் மற்றும் சிரியாவில் செயல்பட்டு வரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் இணைந்திருந்த, மகாராஷ்டிராவின் தானே மாவட்டம் கல்யாணைச் சேர்ந்த 4 இளைஞர்களில் ஒருவரான ஆரிப் மஜீத் நேற்று இந்தியா திரும்பியுள்ளார்.
இவரை தேசியப் புலனாய்வு அமைப்பு(என்.ஐ.ஏ) தனது பாதுகாப்பில் எடுத்து விசாரித்து வருகிறது.
ஈராக்கிற்கு யாத்திரை சென்ற இளைஞர்கள் 4 பேர் ஐஎஸ் அமைப்பில் இணைந்து விட்டதாக ஒரு சில மாதங்களுக்கு முன்பு தகவல்கள் வெளியானது, மேலும் நால்வரில் ஒருவர் போரில் கொல்லப்பட்டு விட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
இருப்பினும் இச்செய்தி இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில், ஆரிப் என்பவர் இந்தியா திரும்பியுள்ளார்.
அந்த இளைஞர்களிடம், ஐ.எஸ் அமைப்பின் தீவிரவாத நடவடிக்கைகள் மற்றும் ஈராக்கில் அந்த தீவிரவாத அமைப்பினால் கடத்திச் செல்லப்பட்ட 40 இந்தியர்களின் நிலைமை குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக தெரிகிறது.
0 comments :
Post a Comment