பெங்களுரில் கட்டாயப்படுத்தி விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 11 பெண்களை பொலிசார் மீட்டுள்ளனர்.
பெங்களுர் பொலிஸ் கமிஷனருக்கு டுவிட்டர் மூலமாக நேற்று ஒரு தகவலை நபர் ஒருவர் அனுப்பியிருந்தார்.
அதில் விவேக்நகர், ஈஜிபுரா பகுதியிலுள்ள கடம்பா என்ற பில்டிங்கில் விபச்சாரம் நடப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிசார், 11 பெண்களை மீட்டு அவர்களை கடத்தி வந்த கும்பலை கைது செய்துள்ளனர்.
இதில் 3 பெண்கள் கொல்கத்தாவையும், 3 பேர் ஆந்திராவையும், மூவர் மும்பையையும் மற்ற இருவர் கர்நாடகாவையும் சேர்ந்தவர் என கூறப்படுகிறது.
இதையடுத்து ஆள்கடத்தல், உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து, இந்த விவகாரத்தில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
Wednesday, November 26, 2014
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment