சென்னையில் வாட்ஸ்-அப் உதவியால் குப்பைகளுக்கு நடுவே உயிருக்கு போராடிய ஆதரவற்ற மூதாட்டி மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சென்னை கொடுக்குபேட்டை மேற்கு கிருஷ்ணப்பகிராமணி தோட்டத்தில் குப்பைகளுக்கு நடுவே ஆதரவற்ற மூதாட்டி ஒருவர் உயிருக்கு போராடுவதாக வாட்ஸ்-அப்பில் ஒரு தகவல் பரவியது.
மேலும் கருணை உள்ளத்தோடு அம்மூதாட்டிக்கு உதவிடுமாறு வேண்டுகோளும் விடுக்கப்பட்டது.
இதனையடுத்து வாட்ஸ் அப்பில் பரவிய இத்தகவலைப் படித்த சிலர், இது தொடர்பாக 108 ஆம்புலன்ஸிற்கு தகவல் கொடுத்தனர்.
உடனடியாக விரைந்து வந்த ஆம்புலன்ஸ், உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அம்மூதாட்டியை மீட்டு, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
பின்னர், அந்த மூதாட்டி மீட்டப்பட்ட தகவல் புகைப்பட ஆதாரத்துடன் வாட்ஸ்-அப்பில் பகிர்ந்து கொள்ளப்பட்டது.
Sunday, November 30, 2014
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment