இங்கிலாந்தை சேர்ந்த இந்திய வம்சாவளியினரான அபு ருமாய்சாக் என்பவர் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் தனது பிறந்து குழந்தையுடன் இணைந்துள்ளார்.
சித்தார்தா தார் என்ற அபு ருமாய்சாக் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இங்கிலாந்தில் தீவிரவாத நடவடிக்கையை ஊக்குவிப்பதாக சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டார்.
பின்னர் அவர் டிசம்பரில் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஜாமீனில் விடுதலையான அபு ருமாய்சாக் அங்கியிருந்து தப்பி சிரியாவிற்கு சென்றுள்ளார்.
அங்கு ஐ.எஸ். படையில் இணைந்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. தீவிரவாத இயக்கத்தில் இணைந்த அபு ருமாய்சாக் தனது பிறந்த குழந்தை மற்றும் ஏ.கே. 47 துப்பாக்கியுடன் புகைப்படம் எடுத்து அதனை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
புகைப்படத்தை பதிவு செய்துள்ள அவர், இஸ்லாமியவாதிகள் ஒரு "புதிய தலைமுறை" என புகழ்ந்துரைத்துள்ளார்.
ருமாய்சாக் தனது கர்ப்பிணி மனைவி மற்றும் நான்கு இளம் குழந்தைகளுடன் பாரிஸ் செல்லும் பேருந்தில் சென்று இறுதியில் சிரியாவிற்கு வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பிரிட்டனின் மோசமான பாதுகாப்பு அமைப்பு என்னை எளிதாக இஸ்லாமிக்கில் இணைய வழிவகை செய்தது என்று தெரிவித்துள்ளார்.
Friday, November 28, 2014
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment