தனது வரலாற்று படத்தில் சல்மான் கான் தான் தனது கணவர் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என முன்னணி டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா கூறியுள்ளார்.
தலைப்பை பார்த்து யாரும் அதிர்ச்சி அடைய வேண்டாம். இந்திய குத்துசண்டை வீராங்கனை மேரி கோமின் வாழ்க்கை படமாக எடுக்கப்பட்டு 100 கோடிகளையும் வசூலித்தது.
இதைத் தொடர்ந்து தற்போது தனது வாழ்க்கை வரலாறு குறித்த படத்தை எடுக்க பச்சை கொடி காட்டி விட்டார் சானியா மிர்சா.
இந்த படத்தில் சல்மானும், தீபிகா படுகோனும் சேர்ந்து நடிக்க வேண்டும் என அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், என் வாழ்க்கை வரலாற்று படத்தில் எனது கணவர் சோயபாக சல்மான் கான் நடிக்க வேண்டும்.
சல்மான் என்னுடைய நல்ல நண்பர். மேலும் அவர் எனக்கு மிகவும் பிடித்த நடிகருமாகவும் இருக்கிறார். படத்தில் என் கதாபாத்திரத்தில் தீபிகா படுகோனே தான் நடிக்க வேண்டும்.
சல்மானும், தீபிகாவும் இதுவரை ஒரு முறை கூட ஜோடி சேர்ந்து நடித்தது இல்லை. அதனால் என் வாழ்க்கை வரலாற்று படத்தில் அவர்கள் சேர்ந்து நடித்தால் அது நன்றாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
Wednesday, November 26, 2014
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment