நடிகையுடன் இணைத்து வெளியான புகைப்படங்கள் தொடர்பாக பிரான்ஸ் அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
பிரான்ஸ் அதிபர் பிரான்ஷூவா ஹொலாந்த் மற்றும் நடிகை ஜூலி கேயட் இடையிலான உறவு தொடர்பான செய்திகள் கடந்த ஜனவரியில் நாளேடுகளில் பிரபலமாகி வந்தன.
இந்நிலையில் அதிபர் மாளிகையில் அதிபரின் தனிப்பட்ட அறையில் பிராங் கோயிஸ் ஜூலி கேயட் அமர்ந்திருப்பது போன்ற 3 புகைப்படங்கள் கடந்த வாரம் வெளியாகின.
இவை கடந்த அக்டோபர் மாதம் ரகசியமாக படம் பிடிக்கப்பட்டதாக நாளிதழ் கூறியிருந்தது.
தற்போது புகைப்படங்கள் வெளியான விவகாரம் அவரை மிகவும் கவலை அடையச் செய்துள்ளது. அதிபரின் தனிப்பட்ட ஊழியர்களில் ஒருவர் தனது கைப்பேசி மூலம் இந்த படத்தை எடுத்திருக்கலாம் என அதிகாரிகள் கருதியுள்ளனர்.
எனினும் விசாரணையில் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் சர்க்கோஸி பதவிக்காலத்தில் பணியில் அமர்த்தப்பட்ட 5 ஊழியர்கள் சந்தேகத்தின் பேரில் இடமாற்றம் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Sunday, November 30, 2014
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment