சின்னத்திரையின் முன்னணி நட்சத்திரம் மகாலட்சுமி. மங்கையர்கரசி உள்பட பல சீரியல்களில் நடித்து வருகிறார். அவ்வப்போது திரைப்படங்களிலும் நடிப்பார். தற்போது மகாலட்சுமி ஒரு குறும்படத்தில் நடித்திருக்கிறார். அனிதா, அனுமதி, உறவுகள் போன்ற நாடகத்தை இயக்கியவரும், இனிமேலாவது என்ற சீரியலுக்கு வசனம் எழுதியவருமான ஆர்.ரவிகுமார் இயக்கிய இது நல்லா இருக்கு என்ற குறும்படத்தில் மகாலட்சுமி ஹீரோயினாக நடித்திருக்கிறார்.
தஷி இசை அமைத்துள்ளார், அருண் ஒளிப்பதிவு செய்துள்ளார், வி4 கம்பென்ஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ளார். "மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நல்ல கதை என்பதால் நட்புக்காக நடித்துக் கொடுத்தேன்" என்கிறார் மகாலட்சுமி.
"கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒருமைப்பாட்டுக்காக ஒரு ஆண்டு சைக்கிள் பயணம் செய்தேன். அதன் பிறகு சினிமா, சின்னத்திரைக்கு வந்தேன். சினிமாவில் ஒரு படம் இயக்க வேண்டும் என்பது ஆசை. அதற்கு ஒரு விசிட்டிங் கார்டாக இந்த குறும்படத்தை எடுத்திருக்கிறேன். நட்புக்காக மகாலட்சுமி நடித்துக் கொடுத்துள்ளார்" என்கிறார் இயக்குனர் ரவிராஜா.
Saturday, November 29, 2014
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment