Saturday, November 29, 2014

கடந்த 25ம் திகதி கனேடிய பாராழுமன்றில் ராதிகா சிற்சபேசன் MP உரையாற்றி இருந்தார். அவர் தனது உரையில் மாவீரர்களை கெளரவித்துப் பேசியிருந்தார் என்ற செய்தி ஏற்கனவே வெளியாகி இருந்தது. இன் நிலையில், அன் நாட்டின் மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஸ்டீபன் பான்லி ராதிக்கா அப்படி பேசியிருக்க கூடாது என்று தெரிவித்துள்ளார். அவர் விடுதலைப் புலிகளையும், மேலும் போராடி இறந்துபோன புலிகளைப் பற்றியே அவ்வாறு பேசியுள்ளார் என்று ஸ்டீபன் குறிப்பிட்டுள்ளார். ராதிகா சிற்சபேசன் பகிரங்கமாக எல்லோரிடமும் மன்னிப்புக் கோரவேண்டும் என்று அவர் ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்துள்ளார்.

கனடாவில் உள்ள பல ஊடகங்கள் இந்த சர்சையை முன் நிலைப்படுத்தி செய்திகளை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடையம் ஆகும். ஒரு பெண் தனது நாடு குறித்துப் பேசக் கூட அவருக்கு அறுகதை இல்லையா ? மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட பிரதி நிதி ஒருவர், தனது சொந்தக் கருத்துக்களை முன்வைத்தால் அதற்கு ஏன் அவர் மன்னிப்புக்கோரவேண்டும்? அத்தோடு புலிகள் தொடர்பாக அவசரமான முடிவை ஐரோப்பிய ஒன்றியம் எட்டிவிட்டது என்று நீதிமன்ற தீர்ப்பில் கூட கூறப்பட்டுள்ளது. இன் நிலையில் புலிகள் இயக்கத்தை கனடா எவ்வாறு தடைசெய்தது? அதன்ற்கான பின் புலம் என்ன என்பதும் கேள்விக்குரிய விடையம் அல்லவா?

இன் நிலயில் அன் நாட்டு அமைச்சர் ஸ்டீபன் பான்லி கூறியுள்ள கருத்துக்கள் மிகவும் கண்டிக்கத்தக்கவை ஆகும். இதற்கு கனேடியத் தமிழர்கள் நிச்சயம் தகுந்த பதிலடியை வழங்குவார்கள்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer