Thursday, November 13, 2014

அருள்நிதி, ரம்யா நம்பீசன், சிங்கம்புலி, பகவதி நடிக்கும் படம் நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும். இதனை ஜே.எஸ்.கே பிலிம் கார்பரேஷனும், லியோ விஷன் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. நல்லா இருந்த ஊரை நாலு போலீஸ்காரர்கள் கெடுப்பது மாதிரியான கதை. போலீசை தவறாக சித்தரித்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது என்ற தகவல் பரவியுள்ளது.

இதுகுறித்து தயாரிப்பாளர் ஜே.சதீஷ்குமார் கூறியதாவது: நாங்கள் தயாரித்த நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படங்களுக்கு நீளமான தலைப்பு வைத்தது போலவே இதற்கும் வைத்துள்ளோம். அந்த படங்களை போன்றே இதுவும் காமெடி படம். இதுவரை யாரும் கேட்டிராத, பார்த்திராத புதுமையான கதை களம். இயக்குனர் ஸ்ரீகிருஷ்ணா இந்த கதையை சொன்ன போதே தயாரிக்க முடிவு செய்து விட்டேன். காமெடி படங்களில் இது புது டிரண்டை உருவாக்கும்.

ஒரு கிராமம் தமிழ்நாட்டுக்கே முன்மாதிரியாக இருக்கிறது. எந்த குற்றச் செயல்களும் அங்கு நடக்கவில்லை. இதனால் போலீசுக்கு வேலை இல்லை. இதை மாற்ற நினைக்கிறார்கள் நான்கு போலீஸ்காரர்கள். அதற்காக ஊருக்குள் பல குட்டி கலாட்டாக்களை செய்கிறார்கள். அவர்களால் அது முடிந்ததா? இல்லையா என்பதுதான் கதை. இதில் போலீசை குறைகூறியோ, விமர்சித்தோ ஒரு காட்சிகூட இருக்காது. ஜாலியான காமெடி படம். என்கிறார் சதீஷ்குமார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer