இந்திய அணி வீரர் ரோஹித் சர்மாவை போற்றிப் புகழ்ந்துள்ளார் வெஸ்ட் இண்டீசின் பிரையன் லாரா.
இலங்கைக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா இரண்டாவது முறையாக இரட்டைச் சதம் விளாசி சாதனை படைத்தார்.
இவரது உலக சாதனை குறித்து வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் லாரா கூறுகையில், நாங்கள் இங்கிலாந்தின் மான்செஸ்டர் மைதானத்தில், சர் விவியன் ரிச்சர்ட்ஸ் எடுத்த 189 ஓட்டங்கள் என்ற சாதனையுடன் கிரிக்கெட்டில் வளர்ந்தவர்கள்.
அப்போதெல்லாம் ஒருநாள் போட்டியில் 200 ஓட்டங்கள் சாத்தியமே என்று நான் நினைத்தேன்.
ஆனால் இப்போது ரோகித் சர்மாவின் 264 ஓட்டங்கள் என்ற உலக சாதனை எட்ட முடியாத ஒன்று என்றே எனக்குத் தோன்றுகிறது.
இது மிகவும் அபாரமான ஆட்டத்திறன், இதனை கடந்து செல்வது மிகக் கடினம்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் 400 ஓட்டங்கள் சாதனை முறியடிக்கப்படுமா? என்ற கேள்விக்கு ஆம் என்பதே எனது பதில் என்று தெரிவித்துள்ளார்.
Saturday, November 29, 2014
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment