அவுஸ்திரேலிய வீரர் பிலிப் ஹியூக்ஸை தொடர்ந்து நடுவர் ஒருவர் பந்து தாக்கி மரணம் அடைந்த ஒன்று சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஹியூக்ஸ் மரணம் அடைந்து 4 நாட்கள் தான் ஆகிறது. இந்த சோகத்தில் இருந்து மீள்வதற்குள் இஸ்ரேல் நாட்டில் உள்ள அஸ்டோட் நகரில் நடந்த தேசிய கிரிக்கெட் லீக் போட்டியில் நடுவர் ஒருவர் பந்து தாக்கி மரணம் அடைந்துள்ளார்.
இந்தப் போட்டியில் 58 வயதான ஹில்லல் ஆஸ்கர் நடுவராக பணியாற்றினார். அப்போது துடுப்பாட்டக்காரர் அடித்த பந்து அவரை நோக்கி வந்தது. அது அவரது தாடையை தாக்கியது.
இதில் பலத்த காயத்துடன் அவர் நிலைகுலைந்து கீழே விழுந்தார். உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் இறந்தார்.
ஆஸ்கரின் மரணத்துக்கு இஸ்ரேல் கிரிக்கெட் சங்கம் அனுதாபம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அதன் தலைவர் குட்கேர் கூறுகையில், இந்த செய்தி எங்களை மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அவர் இஸ்ரேல் அணி வீரராக, அணித்தலைவராக பணிபுரிந்தவர்.
தற்போது சர்வதேச நடுவராக இருந்தார். அவரது மரணத்துக்கு அனைத்து வீரர்களும், இஸ்ரேல் கிரிக்கெட் சங்கமும் இரங்கல் தெரிவித்துள்ளது என்று கூறியுள்ளார்.
அவரது இறுதிச்சடங்கு 3ம் திகதி நடக்கிறது. பந்து தாக்கி நடுவர் மரணம் அடைந்த சம்பவம் தொடர்பாக இஸ்ரேல் பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Sunday, November 30, 2014
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment