Wednesday, November 26, 2014

இலங்கை அணித்தலைவர் மேத்யூஸூன் கிரிக்கெட்டில் நடந்த சில நிகழ்வுகள் புகைப்படங்களின் தொகுப்பாக கொடுக்கப்பட்டுள்ளன.

இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்ட வங்கதேச அணிக்கு எதிரான தொடரில் மேத்யூஸ் புதிய அணித்தலைவராக நியமிக்கப்பட்டார். அவுஸ்திரேலிய தொடரில் ஜெயவர்த்தனே அணித்தலைவர் பதவியில் இருந்து விலகினார். இதனால் மேத்யூஸ் அணித்தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.

ஒருநாள் கிரிக்கெட்டில் மேத்யூஸ் புதிய சாதனை

இலங்கை அணித்தலைவர் மேத்யூஸ் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்த ஆண்டில் ஆயிரம் ஓட்டங்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார்.

டோனி இந்திய அணியின் தூண்: மேத்யூஸ்

இந்திய அணித்தலைவர் டோனி அணியின் தூண் ஆவார். அவர் அபாயகரமான வீரர். அவர் இல்லாமல் போனால் எதிரணி அதை தங்களுக்கு கிடைத்த வாய்ப்பாக நினைக்கும் என மேத்யூஸ் கூறியிருந்தார்.

மேத்யூஸ் தலைமையில் வரலாறு படைத்த இலங்கை

சமீபத்தில் லீட்ஸில் நடைபெற்ற இறுதி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தை பரபரப்பான ஆட்டத்தில் வீழ்த்தி வெற்றிவாகை சூடியது இலங்கை அணி. இதன் மூலம் பிரிட்டன் மண்ணில் முதன்முதலாக டெஸ்ட் தொடரைக் கைப்பற்றி வரலாறு படைத்தது.

காதலியை கரம்பிடித்த மேத்யூஸ்

கடந்த 2013ம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணியின் அணித்தலைவரான அஞ்செலோ மேத்யூஸ், தனது பள்ளி கால தோழியான ஹெஷானி சில்வாவை மணந்தார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer