Sunday, November 16, 2014

பழங்களில் ஆப்பிள், மாதுளம் பழங்களை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

இதனைக் கொண்டு மில்க் ஷேக் செய்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

தேவையான பொருட்கள்

ஆப்பிள் - 1,
பட்டை - சிறிது,
மாதுளை முத்துகள் - ஒரு கப்,
பால் - ஒரு கப்,
தேன் - சிறிது.

செய்முறை

தோலோடு ஆப்பிளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும்.

அதனுடன் மாதுளை, பட்டை, பால், தேன் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு நுரை வரும் வரை மிக்ஸியில் அடித்து வடிகட்டி தினமும் பருகவும்.

* நிறம், சத்து, சுவை மூன்றும் கலந்தது. ஆப்பிளோடு மாதுளையும் பாலும் சேரும்போது மொத்த சத்துகளும் ஒரே கப்பில் கிடைக்கிறது.

* தேன் சேர்த்துப் பருகுவது அழகைக் கூட்டும்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer