Friday, November 28, 2014

விருதுநகரில் உள்ள பள்ளி ஒன்றில் மாணவன் ஒருவனை சகமாணவன் கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடியில் அரசு மேல்நிலைப்பள்ளியில் அயன்கரிசல்குளத்தை சேர்ந்த விவசாயி கோபால் என்பவரது மகன் பாஸ்கரன் (13) 8ம் வகுப்பு படித்து வந்தார்.

இன்று காலை 8 மணிக்கு அரசு பேருந்தில் பந்தல்குடிக்கு வந்த பாஸ்கரன், பள்ளிக்கு சென்று தனது வகுப்பறையில் உட்கார்ந்திருந்தார்.

அப்போது அதே பள்ளியை சேர்ந்த மற்றொரு மாணவன் பாஸ்கரனிடம் வந்து தகராறு செய்துள்ளார். இதில் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இருவருக்கும் வாக்குவாதம் வலுத்ததால், ஆத்திரமடைந்த அந்த மாணவன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பாஸ்கரனின் வயிறு உள்பட பல இடங்களில் குத்தி விட்டு பள்ளியை விட்டு தப்பி ஓடியுள்ளார்.

பலத்த காயமடைந்த பாஸ்கரன் சம்பவ இடத்திலேயே துடித்துடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இத்தகவல் அறிந்த பந்தல்குடி பொலிசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, இறந்த மாணவன் பாஸ்கரன் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கத்தியால் குத்திய அந்த மாணவனுக்கும், பாஸ்கரனுக்கும் இடையே இருந்த முன் விரோதத்தால், இந்த கொலை சம்பவம் நடந்திருப்பதாக பொலிசார் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தற்போது கொலை செய்த மாணவனை பொலிசார் தீவிரமாய் தேடி வருகின்றனர். மேலும் பள்ளி வளாகத்தில் இச்சம்பவம் நடந்திருப்பது பெற்றோர்கள் மத்தியில் பீதியை கிளப்பியுள்ளது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer