சிலி நாட்டை சேர்ந்த வேலாண்டினோ அமேடா பரேரா (32) என்ற நபர், முதியவர் ஒருவர் கழுத்தில் கத்தியை வைத்து திருட முயன்றுள்ளார்.
இதனை பார்த்த பொது மக்கள் அந்த நபரை மடக்கி பிடித்து, கம்பி ஒன்றில் நிர்வாணமாக செலோபன் டேப் மூலம் வெயிலில் கட்டி வைத்துள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு 20 நிமிடங்கள் கழித்து வந்த பொலிசார், அந்த நபரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்துவிட்டு பின்னர் விடுதலை செய்துள்ளனார்.
இதுகுறித்து பொலிஸ் செய்தியாளர் கூறுகையில், முதியவர் திருடனின் மீது எந்தவித புகாரும் அளிக்காததால் அவரை விடுதலை செய்ததாக கூறியுள்ளார்.
இந்த சம்பவத்தை பலர் புகைப்படம் மற்றும் காணொளி எடுத்து இணையத்தில் பதிவேற்றம் செய்ததை அடுத்து பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
மேலும், பொலிசார் மீதும் நீதியின் மீதும் நம்பிக்கை இல்லாததால் மக்கள் இவ்வாறு நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.
0 comments :
Post a Comment