அவுஸ்திரேலிய வீரர் பிலிப் ஹியூக்ஸ் பந்து தாக்கி மரணம் அடைந்த சம்பவம் கிரிக்கெட் உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்துவரும் நிலையில், அணித்தலைவர் மைக்கேல் கிளார்க் கண்ணீர்மல்க பேட்டியளித்துள்ளார்.
அவர் கூறுகையில், ஹியூக்ஸ் மரணம் அவுஸ்திரேலிய அணிக்கு தாங்க முடியாத வேதனையாகும்.
ஆழமான வலியை ஏற்படுத்தி உள்ளது. அவரது இழப்பை எங்களால் வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
அவர் அவுஸ்திரேலிய அணிக்காக மகிழ்ச்சியுடன் விளையாடினார், வீரர்களுடனும் மிகுந்த அன்போடு இருந்தார்.
2009–ல் அறிமுகமான அவர் 26 டெஸ்டில் மட்டுமே விளையாடி உள்ளார்.
ஒருநாள் போட்டியில் ஹியூக்ஸ் பனியன் எண் 64 ஆகும். அந்த நம்பரை வேறு யாருக்கும் அளிக்க கூடாது என்று அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திடம் விடுத்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலிய வீரர்களை சகஜ நிலைக்கு கொண்டு வர அணியின் டாக்டர் மற்றும் மனோதத்துவ நிபுணர் ஆகியோர் ஆலோசனைகளை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment