Saturday, November 29, 2014

தமிழ் சினிமாவில் 80களில் வந்து வெற்றி பெற்ற மாநிற அழகிகளில் ஒருவர் நிரோஷா. ராதிகாவின் தங்கை. புகழின் உச்சியில் இருக்கும்போதே ராம்கியை காதலித்து செட்டிலானவர். சில வருடங்களுக்கு முன்பு சின்னத்திரைக்கு வந்தார் சின்ன பாப்பா பெரிய பாப்பா பிரேக் கொடுத்தது. அதன் பிறகு சின்னத்திரையிலிருந்தும் ஒதுங்கியவர் இப்போது மீண்டும் சின்ன பாப்பா பெரிய பாப்பா மூலம் வந்திருக்கிறார். இடையில் பப்பாளி என்ற படத்தில் ஒரு பாட்டுக்கு ஆடினார் சில படங்களில் காமெடியாக நடிக்கவும் செய்தார். தற்போது ராம்கியும் நடிக்க ஆரம்பித்து விட்டார்.

"சின்னத்திரையில் எனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிருக்கேன்னு சொல்லலாம். அக்கா சின்னத்திரையில் பெரிய இடத்தில் இருக்காங்க. அவங்களை யாரும் ஜெயிக்க முடியாது. ஏன் அக்கா அளவுக்கு வரமுடியலைன்னு சில நேரம் யோசித்து பார்ப்பேன். அவுங்க அளவுக்கு கடுமையா உழைக்கலைன்னு தோணும். அவங்க எப்போதும் நடிச்சிக்கிட்டே இருந்தாங்க. தான் கல்யாண வாழ்க்கைக்கு சென்றதும் பிரேக் எடுத்துக்கிட்டேன்.

இப்போது மீண்டும் அக்கா அழைத்துவந்திருக்கிறார். ராம்கியுடனான இருபது வருட வாழ்க்கை சந்தோஷமா இருக்கு. இப்பவும் லவ் பண்ணிக்கிட்டுதான் இருக்கோம். அவருக்கு ஒரு லட்சியம் இருக்கு. இயக்குனர் லட்சியம். 2015ல அது நிறைவேறும் ஒரு தயாரிப்பாளரா மாறி நானே நிறைவேற்றி வைப்பேன். என்கிறார் நிரோஷா.

0 comments :

Post a Comment

 
Toggle Footer