தனியார் மசாஜ் பார்லரில் பொலிசார் சோதனை நடத்தியபோது, அங்கு விபசாரத்திற்காக தங்க வைக்கப்பட்டிருந்த அழகிகள் ரகசிய அறை வழியாக தப்பி ஓடி விட்டதால் பொலிசார் ஏமாற்றம் அடைந்தனர்.
மும்பை சாந்தாகுருஸ் மேற்கு பகுதியில் உள்ள தனியார் மசாஜ் பார்லரில் சட்டவிரோதமாக விபசாரம் நடந்து வருவதாக சமூக குற்றத்தடுப்பு பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.
இதன்பேரில், நேற்று இரவு 10 மணி அளவில் பொலிசார் சாதாரண உடையில் அந்த பாரில் சென்று ரகசியமாக கண்காணித்தனர். அப்போது அங்கு விபச்சாரம் நடப்பதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை.
எனவே பொலிசார் அதிரடியாக மசாஜ்பார்லரினுள் நுழைந்து சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்த சுவரில் கண்ணுக்கு தெரியாத அளவிற்கு ரகசிய கதவு அமைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர்.
மேலும், அந்த கதவை உடைத்துக் கொண்டு பொலிசார் உள்ளே நுழைந்தனர். அங்கும் நடந்த சோதனையில் அழகிகள் பயன்படுத்திய உடைகள், ஆணுறைகள் போன்றவை கண்டெடுக்கப்பட்டன.
இதன் மூலம் அங்கு விபச்சாரம் நடந்தது உறுதி செய்யப்பட்டது. மேலும் அழகிகள் தப்பி ஓட வசதியாக அங்கு ஏணி ஒன்றும் அமைக்கப்பட்டு இருந்தது.
பொலிசார் கண்காணிப்பதை அறிந்த மசாஜ் பார்லர் உரிமையாளர் ஏற்கனவே அழகிகளை அங்கிருந்து ஏணி வழியாக வெளியேற்றி தப்பி செய்தது தெரியவந்தது.
இதனால் பொலிசார் ஏமாற்றம் அடைந்தனர், மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sunday, November 30, 2014
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment