அருப்புக்கோட்டையில் மாணவர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், ஓரினச் சேர்க்கைக்கு இணங்காததால் கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட மாணவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பந்தல்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்த மாணவன் பாஸ்கரன், கடந்த வெள்ளியன்று வகுப்பறைக்குள் முன்னாள் மாணவர் மாரீசுவரனால் கொலை செய்யப்பட்டார்.
பொலிசாரின் முதல் கட்ட விசாரணையில் ஓரினச் சேர்க்கை விவகாரமே கொலைக்கான காரணம் எனக் கண்டுபிடித்துள்ளனர். பொலிசாரிடம் மாரீஸ்வரன் அளித்த வாக்குமூலத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளன.
முன்னாள் மாணவர் மாரீஸ்வரன் தனது வாக்குமூலத்தில் கூறியிருப்பது:-
மாணவன் பாஸ்கரனுடன் எனக்கு நல்ல பழக்கம் இருந்தது. தன் பாலின சேர்க்கை தொடர்பும் உண்டு.
அவனுடன் நெருங்கி பழகியதால் ‘வேட்டையாடு விளையாடு' சினிமா போல அவனது பெயரை நான் பச்சை குத்திக் கொண்டேன். இருவரும் வெளியூருக்கும் சென்று வந்தோம். இந்த நிலையில் இந்த உறவு ஊருக்குள் தெரிந்தது.
இதனையடுத்து என்னுடன் பழகுவதை பாஸ்கரன் குறைத்தான். பழைய செயல்களுக்கும் மறுத்தான். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
இதற்கிடையில் பொலிசிலும் புகார் செய்யப்பட்டது. இதனால் மேலும் அதிர்ச்சிக்குள்ளான நான், ஆத்திரத்தில் பாஸ்கரனை கத்தியால் குத்தி கொலை செய்தேன்.
மேலும் என்னுடன் மில்லில் வேலை பார்த்த மகேஸ்வரனுடன் சில நாட்களுக்கு முன்பு பள்ளிக்கு வந்து கொலைக்கு திட்டம் வகுத்தேன்.
அதன்படி வகுப்பறைக்குள் புகுந்து, பாஸ்கரனை கொலை செய்துவிட்டு, தயாராக நின்ற மகேஸ்வரனுடன் மோட்டார் சைக்கிளில் தப்பிவிட்டேன்.
இந்த நிலையில் மகேஸ்வரனை பிடித்த பொலிசார் அவன் மூலம் என்னை கைது செய்துவிட்டனர் என்று தெரிவித்துள்ளார்.
மாரீஸ்வரனின் வாக்குமூலத்தையடுத்து பாஸ்கரனுக்கும் ஓரினச் சேர்க்கையில் தொடர்பு இருந்ததா என்பது குறித்து பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sunday, November 30, 2014
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment