Saturday, November 29, 2014

சினிமா செல்வாக்கை பயன்படுத்தி அரசியலில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்திவிட முடியாது என தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஞானதேசிகன் தெரிவித்துள்ளார்.

ஜி.கே. வாசனின் புதிய கட்சி தொடக்க விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஞானதேசிகன் திருச்சி வந்திருந்தார்.

அப்போது அவரிடம் நடிகை குஷ்பு காங்கிரசில் இணைந்தது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர் பதிலளிக்கையில், நடிகர், நடிகைகளை சினிமாவில் பார்த்து ரசிக்கவே மக்கள் விரும்புகின்றனர், அந்த செல்வாக்கை வாக்கு வங்கியாக மாற்றுவது எளிதான காரியம் அல்ல.

இது 1989ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் நிரூபணம் ஆனது. அந்த தேர்தலில் ஸ்ரீதேவி அவரது தந்தை அய்யப்பன் போட்டியிட்ட சிவகாசி உள்பட 3 தொகுதிகளில் பிரச்சாரம் செய்தார். ஆனால் அந்த 3 தொகுதிகளிலும் காங்கிரஸ் தோல்வியை தான் தழுவியது.

2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் நகைச்சுவை நடிகர் வடிவேலு திமுகவுக்காக பிரச்சாரம் செய்தாரே, என்ன ஆனது.

விஜயகாந்த் தனது ரசிகர் மன்றங்களை அரசியல் வழியில் நடத்தி ஆரம்பத்தில் திமுகவுக்கு உதவினார், பின்னர் அவரே தனியாக ஒரு கட்சியை தொடங்கினார்.

மூப்பனார் ஆதரவாளர்கள் காங்கிரஸ் கட்சியிலேயே இருப்பதால் ஜி.கே.வாசனின் கட்சிக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என தெரிவித்துள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer