Wednesday, November 26, 2014

கோயம்புத்தூர் மாவட்டத்தில் சாமியார் ஒருவர் உலக நன்மைக்காக மிளகாய் தூளில் குளித்துள்ளார்.

கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள பட்டரை கிராமத்தில் உள்ள சாமியார் ஒருவரை மக்கள் அன்போடு அழுக்கு சாமியார் என அழைத்து வந்தனர்.

அவர் தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் சரளமாக பேசினார். தன்னை பிரத்யங்கரா தேவியின் அருள் பெற்றவர் எனக் கூறிக்கொண்ட சாமியார், தினமும் பல்வேறு பூஜைகள் செய்து வந்தார்.

தினசரி ஏராளமானவர்கள் அவரை சந்தித்து ஆசி பெற்று வந்தனர்.

இந்நிலையில் உலக நன்மைக்காக, தான் வணங்கும் பிரத்யங்கரா தேவிக்கு சிறப்பு பூஜைகள் செய்து பின்னர் 51 கிலோ மிளகாய் தூள் கரைசலில் குளிப்பதாக சாமியார் அறிவித்தார். அதற்காக பக்தர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

அதன்படி மிளகாய் தூள் கரைசல் குளியலுக்கான ஏற்பாடுகள் நடந்தன. அதற்காக பட்டரை கிராமத்தில் பந்தல் அமைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பிரத்யங்கராதேவிக்கு சாமியார் சிறப்பு பூஜைகள் செய்தார்.

அவரை பக்தர்கள் அழைத்து வந்து தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட பந்தலில் அமர்த்தினர். பின்னர் இதற்காக தயாராக இருந்த 51 கிலோ மிளகாய் தூள் கரைசலை பக்தர்கள் ஒருவர் பின் ஒருவராக சாமியார் மீது ஊற்றினார்கள்.

200–க்கும் மேற்பட்ட பக்தர்கள் மிளகாய் பொடி கரைசலை சாமியார் மீது ஊற்றினார்கள். மிளகாய் தூள் கரைசல் குளியல் முடிந்த பின்னர் சாமியார் பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer