Wednesday, November 26, 2014

குஷ்பு டெல்லியில் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியை சந்தித்து அக்கட்சியில் இணைந்துள்ளார்.

திமுக பிரச்சார பீரங்கியாக செயல்பட்ட நடிகை குஷ்பு, சொந்த கட்சியினராலேயே செருப்பு வீசப்பட்டு, வீடு தாக்கப்பட்டு மனமுடைந்தார். இதையடுத்து அவர் திமுகவில் இருந்து வெளியேறினார்.

அதன் பிறகு எந்த ஒரு அரசியல் கட்சியிலும் சேராமல் சினிமாவில் முழு கவனம் செலுத்தி வருகிறார்.

ஆனால் அவரை தங்களின் கட்சியில் சேர்க்க சில அரசியல் கட்சிகள் தயாராக உள்ளன. இந்நிலையில் குஷ்பு பாஜகவில் சேரப் போவதாக தகவல்கள் வெளியாகின.

ஆனால் அவ்வாறு வந்த செய்தியில் உண்மை இல்லை. அதை எல்லாம் நம்பாதீர்கள் என்று ட்விட்டரில் தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று மாலை டெல்லியில் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியை சந்தித்து அக்கட்சியில் இணைந்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, திமுகவில் எனக்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்படவில்லை, அதனால் ஓராண்டுக்கு முன்பே திமுகவை விட்டு விலக முடிவு செய்தேன். காங்கிரஸ் கட்சி மீது எனக்கு ஈடுபாடு உண்டு.

அதனால் தான் காங்கிரஸில் சேர்ந்துள்ளேன். இந்தியாவின் ஒற்றுமைக்கான ஒரே கட்சி காங்கிரஸ் தான். இப்போது தான் நான் உரிய இடத்திற்கு வந்து சேர்ந்துள்ளேன்.

நான் நாட்டின் நன்மைக்காக பாடுபடுவேன். தமிழகம் என்று மட்டும் இல்லாமல் மொத்த நாட்டின் நன்மையை கருத்தில் வைத்து செயல்படுவேன் என்று தெரிவித்துள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer