Saturday, November 29, 2014

பிரான்ஸ் ஜனாதிபதி பிராங்காய்ஸ் ஹோலண்டே, நள்ளிரவில் நடிகை ஒருவருடன் பைக்கில் ஊர் சுற்றியதை பத்திரிகைகள் சில படமெடுத்து வெளியிட்டுள்ளன.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள எலிசி மாளிகையில் தங்கியிருக்கும் பிராங்காய்ஸ் ஹோலண்டே, 42 வயதான பிரபல நடிகை ஜூலி கயாத்தை கடந்த சில வருடங்களாக காதலித்து வருகிறார்.

இந்நிலையில், ஹோலண்டே நள்ளிரவில் பைக்கில் ஹெல்மெட் அணிந்து கொண்டு, நடிகை தங்கியிருந்த குடியிருப்புக்கு சென்றதும், பின்னர் இருவரும் சேர்ந்து பைக்கில் கிளம்பி சென்ற புகைப்படங்கள் 12 மொழி பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஹோலண்டே, இதுதொடர்பாக விசாரணை மேற்கொள்ளும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து ஜனாதிபதி மாளிகை ஊழியர்களிடையே பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், பிரான்சில் நிலவும் வேலையில்லா திண்டாட்டம், பொருளாதார நெருக்கடி மற்றும் உணவு உற்பத்தியில் தேக்கம் போன்றவற்றில் ஜனாதிபதி கவனம் செலுத்தாமல் நடிகையுடன் ஊர் சுற்றுவதாக சர்கோசி உள்பட பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும், நடிகையுடன் ஜனாதிபதி இருக்கும் புகைப்படங்களை பத்திரிகைகளுக்கு அளித்த விடயத்தில், ஜனாதிபதி மாளிகை அதிகாரிகள் 5 பேர் பல்வேறு பணியிடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer