Friday, November 28, 2014

பல முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இயக்குனர் பாரதிராஜா தான் ஒரு சிறந்த இயக்குனர் மட்டுமல்ல, சிறந்த நடிகரும் கூட என தன் நடிப்பின் மூலம் ரசிகர்களுக்கு நிரூபித்துகாட்டியிருக்கிறார்.

தற்போது இயக்குனர் இமயம் தன் நடிப்பாலும், இயக்கத்தாலும் தமிழ் ரசிகர்களை மேலும் கவர உத்வேகமாகிவிட்டார். 3 புதிய படங்களில் நடிக்கவும், 1 படத்தை இயக்கவும் உள்ளார் பாரதிராஜா.

சலீம் படத்தை இயக்கிய என்.வி.நிர்மல் குமார் இயக்கத்தில், “ஒம்” என்ற படத்திலும், தனது மகன் மனோஜ் பாரதிராஜா இயக்கத்தில் “சிகப்பு ரோஜாக்கள் 2” என்ற படத்திலும், வி. சந்திரன் தயாரிப்பில் கிஷோர் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் ஒரு புதிய படத்திலும் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளார்.

இதைவிட மகிழ்ச்சி தரும் விஷயமாக பாடலாசிரியிர் சிநேகன் நடிப்பில், ஒரு புதிய படத்தை இயக்கவும் இருக்கிறார் பாரதிராஜா.

0 comments :

Post a Comment

 
Toggle Footer