Wednesday, November 26, 2014

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளை ஒழித்துக்கட்டும் நோக்கில் யாஸிதி நபர் ஒருவர் ஈராக்கிற்கு நாடு திரும்பியுள்ளார் .

கடந்த 24 ஆண்டுகளுக்கு முன்பு ஈராக்கை சேர்ந்த குவாசிம் சேசோ (Qassim Shesho) என்ற நபர் ஜேர்மனியில் குடியேறினார்.

யாஸிதி இனத்தை சேர்ந்த இவர், ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளால் தங்களது இன மக்கள் கொடுமைப்படுத்தப்படுவதை அறிந்து மிகுந்த மன வேதனைக்குள்ளாகியுள்ளார்.

எனவே தங்கள் மக்களை மீட்கவும், தான் பிறந்த இடத்தில் சென்று வாழவும் எண்ணிய குவாசிம், தன் மகனுடன் (26) கடந்த மூன்று நாடுகளுக்கு முன்பு மீண்டும் தாயகம் திரும்பியுள்ளார்.

இவர் அங்குள்ள சின்ச்சார் (Sinchar) மலைப்பகுதியில் வாழும் யாஸிதி மக்களை ஒன்று திரட்டி, தீவிரவாதிகளுக்கு எதிரான போராட்டத்தில் அவர்களை ஒருங்கிணைத்துள்ளார்.

இவரின் பெரும் முயற்சியால் ஏராளமானோர், தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு ஆளாகாமல் காப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எனினும் தங்கள் பகுதியிலிருந்து ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளை விரட்டும் வரை, தான் ஓயப்போவதில்லை என குவாசிம் தெரிவித்துள்ளார்.

தற்போது யாஸிதி மதத்தை சேர்ந்த 2,000 வீரர்களை, ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான போராட்டத்தில் இவர் வழிநடத்தி வருகிறார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer