Wednesday, November 26, 2014

உதயநிதி ஸ்டாலின் நடித்த நண்பேன்டா படத்தின் பாடல் வெளியீட்டு விழா விரைவில் சென்னையில் நடைபெற இருக்கிறது.

பொதுவாக தான் நடிக்கும் படங்களின் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதில்லை நயன்தாரா. ஆனால் இந்த படத்தில் கலந்து கொள்ள வசதியாக அவருக்கு ஷுட்டிங் இல்லாத நாட்களில் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இதற்கு முன்பு ஹன்சிகாவுடன் இணைந்து நடித்திருக்கிறார் உதயநிதி. அந்த மேடையில் அவருக்கும் அழைப்பு இருக்கும் என்று நினைத்தாரோ என்னவோ? ‘யார் யாரெல்லாம் வர்றாங்க?’ என்று முன்கூட்டியே கேட்டுக் கொண்டாராம். உதயநிதியின் தோழி ஹன்சிகா வருகிறாரோ இல்லையோ? நயன்தாராவின் முன்னாள் தோழர் ஆர்யாவுக்கு கட்டாயம் இடம் இருக்கும்!

அதிலொன்றும் சிக்கல் இல்லையே நயன்?

0 comments :

Post a Comment

 
Toggle Footer