அருப்புக்கோட்டையில் பள்ளி மாணவனை வகுப்பறையில் கத்தியால் குத்திக் கொன்று விட்டு தப்பி ஓடிய நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்ட எல்லையோர கிராமமான அயன்கரிசல்குளத்தை சேர்ந்த கோபால்(50) ஒரு விவசாயி. இவருக்கு அஸ்வனி என்ற மகளும், பாஸ்கரன் என்ற மகனும் உள்ளனர்.
பந்தல்குடியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பாஸ்கரன் 8ம் வகுப்பு படித்து வந்தார்.
அதே அயன்கரிசல்குளத்தை சேர்ந்த தச்சு தொழிலாளி செல்வம் என்பவரது மகன் மாரீஸ்வரன்(18). அதே பள்ளியில் 11ம் வகுப்பு படித்துவந்த நிலையில் பரீட்சையில் தோல்வியடைந்ததால் படிப்பை நிறுத்திவிட்டார்.
இவர் பாஸ்கரனை ஓரினச்சேர்க்கைக்கு அழைத்துள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்த பாஸ்கரன் இது தொடர்பாக தனது பெற்றோரிடம் புகார் செய்தார்.
இதனால் ஆத்திரமடைந்த பாஸ்கரனின் தந்தை கோபால், மாரீஸ்வரனின் பெற்றோரை அழைத்து கண்டித்துள்ளார். மேலும் பொலிஸிலும் இது தொடர்பாக புகார் செய்யப்பட்டுள்ளது.
இதனால் பாஸ்கரன் மீது மிகுந்த ஆத்திரத்தில் இருந்த மாரீஸ்வரன் நேற்று காலை 8 மணிக்கு பள்ளிக்கு வந்த பாஸ்கரனிடம் சென்று தகராறு செய்தார்.
பிறகு மறைத்து வைத்திருந்த பெரிய கத்தியால் பாஸ்கரனின் நெஞ்சம் முகம் மற்றும் தலையில் பலமாக குத்தினார்.
பாஸ்கரனின் அலறல் சத்தம் கேட்ட மாணவர்கள் வகுப்பறைக்குள் நுழையவும், தலையில் குத்திய கத்தியை எடுக்க முயன்றுள்ளார்.
ஆனால் கத்தி கைக்கு வராததால் உடனே அங்கிருந்து தப்பி பள்ளி சுவர் ஏறி குதித்து தயாராக நின்றிருந்த பைக்கில் ஏறி தப்பி சென்று விட்டார்.
பலத்த காயமடைந்த பாஸ்கரனை மாணவர்கள் அவசர ஊர்தி வரவழைத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் போகும் வழியில் பாஸ்கரன் பரிதாபமாக இறந்தார்.
மேலும், தப்பி ஓடிய குற்றவாளியான மாரீஸ்வரனை பிடிக்க பொலிசார் 4 தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர்.
இந்நிலையில் கோவையில் உள்ள உறவினர் ஒருவர் வீட்டில் பதுங்கி இருந்த மாரீஸ்வரனை பொலிஸார் இன்று கைது செய்தனர்.
Saturday, November 29, 2014
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment