இங்கிலாந்து கிரிக்கெட் அணி 7 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் விளையாட இலங்கை சுற்றுப்பயணம் செய்துள்ளது.
இந்த தொடரில் மழை ஒரு பெரிய பிரச்சனையாக இருப்பதால் தொடர் சரியாக நடப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. பயிற்சி போட்டிகளில் கூட மழை குறுக்கிட்டது. 2வது பயிற்சி போட்டி விளையாடாமலே கைவிடப்பட்டது.
இந்நிலையில் முதல் ஒருநாள் போட்டி இன்று கொழும்பில் நடக்கிறது. இந்த போட்டியிலும் மழை குறுக்கிடலாம் எனத் தெரிகிறது.
இந்திய தொடரில் ஏற்பட்ட நெருக்கடியை இங்கிலாந்து தொடரில் சரிசெய்ய இலங்கை அணி தீவிரம் காட்டும். புதிய வீரர்களின் வருகை அணிக்கு கைகொடுக்கலாம்.
கடைசி முறை 3-2 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்த இங்கிலாந்து பதிலடி கொடுக்க காத்திருக்கிறது என்று இங்கிலாந்து அணித்தலைவர் குக் கூறியுள்ளார்.
தரவரிசையில் 4ம் இடத்தில் உள்ள இலங்கை அணியுடன், 5வது இடத்தில் உள்ள இங்கிலாந்து மோதவுள்ளது.
Wednesday, November 26, 2014
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment