Saturday, November 29, 2014

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி, கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இன்று நடைபெறவுள்ளது.

இங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பணயம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி ஏழு ஒருநாள் போட்டிகளை கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது போட்டியில் இலங்கை அணி 25 ஓட்டங்களால் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை அவுஸ்திரேலிய வீரர் பிலிப் ஹியூஸ் மரணமடைந்ததால், திட்டமிட்டபடி இரண்டாவது போட்டி நடைபெறுமா என்ற எதிர்பார்ப்பு இருந்தது. எனினும் இரு அணித்தலைவர்களும் போட்டியை தொடர இணக்கம் வெளியிட்டுள்ளனர்.

இன்றைய போட்டிக்கு முன்னராக பிலிப் ஹியூஸ்சுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வும் இடம்பெறவுள்ளது.

ஹியூஸ்சின் அகால மரணம் குறித்து இரு அணித்தலைவர்களும் கருத்து வெளியிட்டுள்ளனர்.

பவுன்ஸர் வீசும்போது இதுபோன்று நடக்கும் என்று, நினைத்துப் பார்த்ததே இல்லை. இதுபோல இனி நடக்கக் கூடாது என பிரார்த்திக்கிறோம். இலங்கைக்கு எதிராக தனது முதல் சர்வதேச ஆட்டத்தில் களமிறங்கிய ஹியூஸ் 112 ரன்கள் குவித்து அவுஸ்திரேலியாவை வெற்றி பெறச் செய்தார். அவரது வாழ்வு முடிவுக்கு வந்ததை நம்ப முடியவில்லை என இலங்கை அணித்தலைவர்  அஞ்சலோ மேத்யூஸ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஹியூஸ் இறந்த தினம் கிரிக்கெட்டின் வருத்தமான நாள். இந்த இழப்பை வார்த்தைகளால் தெரிவிக்க முடியாது. இந்த சூழலில் ஆட்டத்தில் பங்கேற்க வேண்டுமா என்று, அணியினருடன் ஆலோசனை நடத்தினேன்.  இறுதியில் இரு அணிகளுமே ஆட்டத்தைத் தொடர விருப்பம் தெரிவித்துள்ளன என இங்கிலாந்து அணித்தலைவர் அலெஸ்டர் குக் தெரிவித்துள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer