ஈரானில் பெண்களுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் உள்ளன.
சமீபத்தில் ஆண்கள் கைப்பந்து போட்டியை ரசித்த ஈரான் பெண் ஒருவருக்கு ஒரு வருட சிறைதண்டனை கொடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் ஈரானின் சுரங்க ரயிலில் பயணித்த பெண் ஒருவர், இசையை கேட்ட ஆர்வத்தில் நடனமாட தொடங்கியுள்ளார்.
அப்போது தலையை மூடி இருந்த பர்தா, ஆர்வ மிகுதியால் அவர் வேகமாய் ஆட ஆட, தலையில் இருந்து சரிந்து அவரது கழுத்தில் இறங்கி விட்டது.
இதை பார்த்த பெண் பயணிகள் சிலர் அவர் ஆடும் போது தங்களை யாரும் பார்த்து விடக்கூடாது என நினைத்து, அந்த ரயில் பெட்டியில் இருந்து வெகு விரைவாக இறங்கி சென்றுள்ளனர்.
பேஸ்புக்கில் பதிவு செய்யபட்ட இந்த வீடியோவை, 7 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.
இவரது செயல் தப்பில்லை என்றாலும் பொது இடங்களில் நடனம் ஆடுவது ஈரானில் தடை செய்யப்பட்டு உள்ளதால், இதற்கு பல அமைப்புகள் எதிர்ப்புகளை தெரிவித்துள்ளன.
0 comments :
Post a Comment