Sunday, November 30, 2014

பாகிஸ்தானுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் மொத்தம் 19 சிக்சர்களை அடித்து புதிய சாதனை நிகழ்த்தியுள்ளது.

இதற்கு முன்பாக ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 2003ம் ஆண்டு பெர்த் டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸில் 17 சிக்சர்களை அவுஸ்திரேலிய அணி அடித்திருந்ததே சாதனையாக இருந்தது.

இந்திய அணி மும்பையில் 2009ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக 15 சிக்சர்களை ஒரு இன்னிங்ஸில் அடித்து 4ம் இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் அணி நியூசிலாந்துக்கு எதிராக 2002ம் ஆண்டு லாகூர் டெஸ்ட் போட்டியில் 15 சிக்சர்களை அடித்திருந்தது.

நியூசிலாந்து அடித்த 19 சிக்சர்களில் 11 சிக்சர்கள் பிரெண்டன் மெக்கல்லம் அடித்தது. ராஸ் டெய்லர், கோரி ஆண்டர்சன், டிம் சவுதீ ஆகியோர் தலா 2 சிக்சர்கள் அடித்தனர். வில்லியம்சன், கிரெய்க் ஆகியோர் தலா 1 சிக்சர் அடித்தனர்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer