Wednesday, November 26, 2014

சொருகிய இடத்திலேயே சிக்கிக் கொண்டு தவியாய் தவிக்கிறது கத்தி.

மீஞ்சூர் கோபியை தந்திரமாக இந்த பிரச்சனையிலிருந்து கழற்றிவிட்டுவிட்ட முருகதாஸ், இப்போது ஆந்திராவில் சிக்கிவிட்டார். நரசிம்மராவ் என்கிற ஷங்கரின் இணை இயக்குனர் நண்பன் பட நேரத்தில் விஜய்யிடம் ஒரு கதையை சொன்னாராம். அது அப்படியே எண்பது சதவீதம் இந்த படத்திலிருக்கிறது. நான் ‘கத்தி’ படத்தை இப்போதுதான் பார்த்தேன் என்று கூறுகிறார் இந்த நரசிம்ம ராவ்.

கிடுக்கிப்பிடி என்னவென்றால், இந்த கதையை நண்பன் படம் வெளிவருவதற்கு முன்பே தெலுங்கு அமைப்புகளில் முறையாக பதிவு செய்து வைத்திருக்கிறார். அதுதான் இப்போது வலுவாக கத்தியை பிடித்துக் கொண்டு நெளிய வைக்கிறது. பிரச்சனை எந்தளவுக்கு ஸ்டிராங்காக இருக்கிறது என்றால், கத்தி படத்தின் தெலங்கு டப்பிங் படத்தை இந்த பிரச்சனை முடிந்த பிறகுதான் வெளியிட வேண்டும் என்று கறாராக கூறிவிட்டதாம் தெலுங்கு சங்கங்கள்.

கூட்டமா சேர்ந்து சிங்கத்தின் முடியில சிக்கெடுக்கறது எப்படின்னு யோசிச்சிட்டு இருக்காங்களாம்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer