Sunday, November 30, 2014

பாகிஸ்தானுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து இன்னிங்ஸ் மற்றும் 80 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி சார்ஜாவில் நடைபெற்றது.

நாணய சுழற்சியில் வென்று துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான், முதல் இன்னிங்ஸில் ஹபீஸ் (197) சதத்தால் 351 ஓட்டங்கள் குவித்தது. நியூசிலாந்து அணியின் கிரேக் 7 விக்கெட் வீழ்த்தினார்.

பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து அணி மெக்கல்லம் (202), வில்லியம்சன் (192) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தில் 3வது நாள் ஆட்ட முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 637 ஓட்டங்கள் குவித்தது.

நான்காவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து அணி 690 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. கிரேக் 65 ஓட்டங்கள் எடுத்தார். பாகிஸ்தான் தரப்பில் ரஹத் அலி, யாசீர் ஷா தலா 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

இதனையடுத்து 339 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான், நியூசிலாந்து பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 63.3 ஓவரில் 259 ஓட்டங்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. நியூசிலாந்து அணியின் போல்ட் 4 விக்கெட்டும், கிரேக் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

இதனால் நியூசிலாந்து இன்னிங்ஸ் மற்றும் 80 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என சமநிலையில் முடிந்தது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer