Wednesday, November 26, 2014

நித்யானந்தாவுக்கு நடத்தப்பட்ட ஆண்மை பரிசோதனை அறிக்கையை 31 பக்கத்தில் தயார் செய்து சிஐடி பொலிசார் இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்கள்.

முன்னாள் சிஷ்யை ஆரத்தி ராவ் தொடர்ந்த பாலியல் குற்றச்சாட்டு வழக்கு தொடர்பாக நடந்த விசாரணையின்போது, தான் ஒரு ஆண்மகன் இல்லை, குழந்தையின் உடல்தான் தனக்கு உள்ளது என்று நித்தியானந்தா தெரிவித்தார்.

எனவே அவர் ஆண்தானா, அல்லது ஆண் அளவுக்கு அவர் வளர்ச்சியடையவில்லையா என்பதை சோதித்து பார்க்க நீதிமன்றம் முடிவு செய்தது.

இதையடுத்து நித்தியானந்தா சாமியாரிடம் செப்டம்பர் 8ம் திகதி ஆண்மை பரிசோதனை நடத்தப்பட்டது. சிஐடி பொலிசார் ஏற்பாட்டின் பேரில் பெங்களூரிலுள்ள விக்டோரியா அரசு பொது மருத்துவமனையில் நித்தியானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை நடத்தப்பட்டது.

விக்டோரியா மருத்துவமனை தலைவர் துர்க்கண்ணா தலைமையில் 6 பேர் கொண்ட மருத்துவர் குழு, நித்தியானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை நடத்தியது.
ரத்த பரிசோதனை உள்ளிட்ட பல பரிசோதனைகளுக்கு நித்தியானந்தா உள்ளானார்.

அதே நேரம் விந்தணு பரிசோதனை போன்றவற்றை செய்ய முயன்றபோது, தனக்கு நெஞ்சுவலி இருப்பதால், சுய இன்பம் செய்தால் உயிருக்கு ஆபத்து வந்து விடும் என்று கூறி மருத்துவர்களுக்கு நித்தியானந்தா ஒத்துழைப்பு அளிக்க மறுத்தார்.

இதன்பிறகு மடிவாளா பகுதியிலுள்ள தடயவியல் ஆய்வு கூடத்தில் அவரது குரல் சோதித்து பார்க்கப்பட்டது. இந்த சோதனை அறிக்கையை சிஐடி பொலிசாரிடம், மருத்துவர்கள் குழு அம்மாத இறுதியிலேயே அளித்திருக்க வேண்டும். ஆனால் அறிக்கையில் எந்த மருத்துவரும் கையெழுத்திடுவது என்பதில் ஏற்பட்ட இழுபறியால் அறிக்கையை அளிப்பதிலும் காலதாமதம் ஆனது.

சோதனை அறிக்கையில் கையெழுத்திடும் மருத்துவர்கள், நித்தியானந்தாவுடனான வழக்கில் சேர்க்கப்படுவார்கள் என்ற அச்சத்தால் மருத்துவர்கள் கையெழுத்திட மறுத்துவந்ததாக தகவல் வெளியாகியிருந்தது.

இறுதியில், துர்க்கண்ணா உட்பட அனைத்து மருத்துவர்களும் கையெழுத்திடுவது என்று முடிவு செய்யப்பட்டது.

மருத்துவர்கள் குழு அளித்துள்ள அறிக்கையை, சிஐடி பொலிசார், இன்று ராம்நகர் நீதிமன்றத்தில் நீதிபதி மஞ்சுளா முன்னிலையில் தாக்கல் செய்தனர். அந்த அறிக்கை 31 பக்கம் கொண்டதாக இருந்தது. ஆனால் மூடப்பட்ட கவரில் வைத்து இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் அறிக்கையில் சில அம்சங்கள் கசிந்துள்ளன.

அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:

ஆணுறுப்பில் ரத்த ஓட்டம் எந்த அளவுக்கு உள்ளது, தடையின்றி ரத்தம் செல்கிறதா என்பதை அறிய நடத்த வேண்டிய டோப்ளர் சோதனைக்கு (எழுச்சி ஊசி) நித்தியானந்தா ஒத்துழைக்கவில்லை, எனவே அந்த சோதனை நடத்தப்படவில்லை.

பெங்களூரு மடிவாளாவில் குரல் பரிசோதனைக்கு நித்தியானந்தாவை உட்படுத்தினோம். அந்த குரல் மாதிரி பதிவு மைசூரிலுள்ள 'ஸ்பீக் அண்ட் ஹியரிங்' மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஆனால் அங்கு, இதை கண்டுபிடிக்க தேவையான சாப்ட்வேர் இல்லை, நிபுணர்கள் இல்லை. தமிழ் பேசத்தெரிந்த 10 பேர் வேண்டும் என்று கூறிவிட்டனர்.

எனவே நீதிமன்ற அனுமதியுடன் குரல் மாதிரி குஜராத்திலுள்ள சோதனை மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் இன்னும் வரவில்லை.

மருத்துவர்கள் நடத்திய சோதனையின்போது நித்தியான்தாவின் வயதுக்கு தக்கபடி அந்தரங்க உடல் உறுப்புகள் வளர்ச்சியடைந்துள்ளது உறுதியாகியுள்ளது.

நித்தியானந்தாவின் உடலில் செக்சுவல் ஹார்மோன்கள் சரியான அளவில் உள்ளன.

அவர் பாலுறவில் ஈடுபட முடியாது என்ற வாதத்திற்கு வலு சேர்க்க எந்த ஆதாரமும் கிடையாது என்று அறிக்கையில் உள்ளது

இந்நிலையில் இன்று, விசாணைக்கு ஆஜராவதற்காக நித்தியானந்தா சாமியார், ராம்நகர் நீதிமன்றத்திற்கு பக்தர்கள் புடைசூழ பாதுகாப்பாக சென்றார்.

குரல் பரிசோதனை மற்றும் ஆண்மை பரிசோதனையின்போது, நித்தியானந்தா, உடலுறவு கொள்ள தகுதியான ஆண்மகன்தான் என்பது தெரியவந்தால், வழக்கில் அவருக்கு எதிரான முக்கியமான ஆதாரமாக இந்த சோதனை மாறும்.

இதையடுத்து அவர் கைது செய்யப்படவும் வாய்ப்பு உள்ளது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer