Friday, November 28, 2014

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமத்தை உடனடியாக நீக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியதையடுத்து ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டித் தொடர் 2008ம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டது. இதில் ஒவ்வொரு அணிக்கும் ஒரு முக்கிய வீரர் என்ற கணக்கின்படி சென்னைக்கு கிடைத்தவர் தான் டோனி.

சென்னை அணியின் அணித்தலைவராக அப்போது முதல் டோனி தான் அணித்தலைவராக தொடருகிறார். இந்திய அணிக்கு பல மகுடங்களை சூட்டிய டோனி, சென்னையையும் அசத்தல் அணியாக கொண்டுவர தவறவில்லை.

2008 ஐபிஎல் தொடரில் இறுதிபோட்டி வரை வந்து ராஜஸ்தான் றொயல்ஸ் அணியிடம் தோற்றது, 2009ல் அரையிறுதி ஆட்டம் வரை சென்றது.

2010ல் ஐபிஎல் சம்பியனானது, 2011ல் மீண்டும் ஐபிஎல் சம்பியனானது, 2012ல் மீண்டும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றபோதிலும் கொல்கத்தாவிடம் தோற்றது.

2013ல் மீண்டும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று மும்பையிடம் தோல்வி, 2014ல் பிளே-ஆப் சுற்றுவரை வருகை என காலடி பதித்தது.

இந்நிலையில், சென்னை அணியின் உரிமையாளர் சீனிவாசன் மருமகன் குருநாத் மெய்யப்பன் சூதாட்ட புகாரில் சிக்கியுள்ளதால், சென்னை அணியை ஐபிஎல்லில் இருந்து நீக்குவது குறித்து பரிசீலிக்குமாறு உச்சநீதிமன்றம் தடாலடியாக கூறியுள்ளது. இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

"ஐபிஎல்லில் சென்னை இல்லையா... சென்னை இல்லைன்னா ஐபிஎல்லே இல்லையே" என ரசிகர்கள் இணையத்தில் தங்கள் கருத்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer