Friday, November 28, 2014

பிரிட்டன் டென்னிஸ் வீரரான ஆண்டி முர்ரே தனது 9 ஆண்டு கால தோழியான கிம் சியர்சை திருமணம் செய்து கொள்ள போவதாக அறிவித்துள்ளார்.

ஸ்காட்லாந்தில் உள்ள டன்பிளேனில் முர்ரேவின் இல்லத்தில் வசிக்கும் குடும்பத்தினரிடம் அவர் இந்த செய்தியை தெரிவித்துள்ளார்.

அவரது 83 வயது பாட்டியான ஷிர்லி எஸ்கைய்னிடம் இவ்விடயத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு முர்ரே கூறியபோது, திருமணத்திற்கான நேரம் வந்துவிட்டது என்று அவர் நகைச்சுவையுடன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஷிர்லி, நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சியடைந்துள்ளோம். கிம் மிகவும் அன்பான பெண் என்று கூறியுள்ளார்.

அவரது தாத்தா ராய் கூறுகையில், ஆண்டி தொலைபேசியில் எங்களை அழைத்து கிம்மிடம் தனது விருப்பத்தை கூறியதாக தெரிவித்தார் என்று கூறியுள்ளார்.

கடந்த 2013ம் ஆண்டு நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டியிலும், 2012ம் ஆண்டு நடைபெற்ற யு.எஸ். ஓபன் டென்னிஸ் போட்டியிலும் முர்ரே கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer