Sunday, November 30, 2014

மேஷம்
வெற்றிச் செய்திகள் வீடு வந்து சேரும் நாள். குடும்பத்துடன் வெளியூர் பயணமொன்றை மேற்கொள்வீர்கள். வீடு மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள். வழக்குகளில் திசை திருப்பம் ஏற்படலாம்.

ரிஷபம்
ஒளிமயமான வாழ்க்கைக்கு உறுதுணை புரியும் நாள். செல்வாக்கு உயரும். நவீன பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். உறவினர்களின் வருகை உண்டு.

மிதுனம்
சொல்லைச் செயலாக்கிக் காட்டும் நாள். தொகை எதிர்பார்த்தபடியே வந்து சேரும். புதிய தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும். புகழ்மிக்கவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

கடகம்
இறை வழிபாட்டால் இனிமை காண வேண்டிய நாள். மறதி அதிகரிக்கும். குழந்தைகளால் சிறுசிறு பிரச்சினைகளைச் சந்திப்பீர்கள். விலை உயர்ந்த பொருட்களைக் கவனமுடன் கையாள்வது நல்லது.

சிம்மம்
கல்யாண வாய்ப்புகள் கைகூடும் நாள். மனக்கலக்கங்கள் மாறும். சகோதர ஒற்றுமை பலப்படும். மாமன், மைத்துனர் வழியில் இனிய செய்தியன்று வந்து சேரும். பயணம் பலன் தரும்.

கன்னி
முன்னேற்றம் கூடும் நாள். வாழ்க்கைத் துணை வழியே இருந்த வாக்குவாதகம் தீரும். சொன்ன சொல்லைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். தொழில் வளர்ச்சி ஏற்படும். திருமண முயற்சி வெற்றி தரும்.

துலாம்
போட்டி பந்தயங்களில் வெற்றி கிடைக்கும் நாள். குடும்பத்தில் மூத்தவர்களின் ஆலோசனைகளை ஏற்று நடப்பது நல்லது. தொழில், வியாபாரத்தை விரிவுபடுத்தும் எண்ணம் மேலோங்கும்.

விருச்சகம்
வளர்ச்சி கூடும் நாள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். பொருளாதார முன்னேற்றம் அதிகரிக்கும். முக்கியப் புள்ளிகளைச் சந்தித்து மகிழ்வீர்கள். பயணங்களால் பலன் உண்டு.

தனுசு
திட்டமிட்ட காரியங்களைத் திட்டமிட்டபடி செய்து முடிக்கும் நாள். புதிய வாகனம் வாங்க எடுத்த முயற்சி கைகூடும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தாய்வழி ஆதரவு உண்டு.

மகரம்
சகோதர வழியில் ஒற்றுமை கூடும் நாள். உத்தியோகத்தில் உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. சம்பள உயர்வு பற்றிய செய்தி வந்து சேரும். பொதுநல ஈடபாடு அதிகரிக்கும்.

கும்பம்
பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நாணயமும், நம்பிக்கையும் கொண்ட நண்பர்களால் தொழிலுக்கு உதவி கிடைக்கும். புதிய கூட்டாளிகள் வந்திணைவர்.

மீனம்
மனஅமைதி கூடும் நாள். இடமாற்றச் சிந்தனை மேலோங்கும். வருமானம் திருப்தி தரும். வழிபாடுகளில் நம்பிக்கை கூடும். தொலைபேசி வழித் தகவல் தொழிலுக்கு உறுதுணையாக அமையும்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer