Saturday, November 29, 2014

மேஷம்
இன்று, உங்கள் மனதில் கலை உணர்வு அதிகரிக்கும், இயற்கை செல்வங்களை ரசித்து மகிழ்வீர்கள். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற, புதியவர்களின் உதவி கிடைக்கும். உபரி பண வருமானம் வந்து சேரும். மனம் வரும்பிய வகையில் சுப காரியம் செலவு செய்வீர்கள்.

ரிஷபம்
இன்று, உங்கள் தகுதி, திறமையை வளர்த்துக் கொள்ள, புதிய வாய்ப்பு வரும். செயல்கள் நிறைவேறி, பாராட்டைப் பெற்றுத் தரும். தொழில், வியாபாரம் சார்ந்த இடர் விலகி, சுமுக நிலை உருவாகும். தாராள பணவரவு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் முக்கியத் தேவை நிறைவேறும்.

மிதுனம்
இன்று, நிதானமாக நடத்த வேண்டிய பணி ஒன்றை அவசர கதியில் மேற்கொள்வீர்கள். தொழில் நுட்ப அறிவை பயன்படுத்துவதால், பணி எளிதாகும். தொழில், வியாபாரத்தில் போட்டியாளர் குறுக்கிடுவர். எதிர்பார்த்ததை விட, பணவரவு குறைந்த அளவில் கிடைக்கும். உடல்நலத்திற்கு சிகிச்சை தேவைப்படலாம்.

கடகம்
இன்று, சிறிய வேலைக்கும் அதிக முயற்சி தேவைப்படலாம், அனுபவசாலியின் உதவி, எதிர்பார்த்த வகையில் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் சராசரி தன்மை இருக்கும், பணவரவுக்கேற்ப புதிய செலவுகளும் ஏற்படும். தொழிற்சாலை இயந்திரங்களை இயக்குபவர்கள், பாதுகாப்பில் கூடுதல் கவனம் வேண்டும்.

சிம்மம்
இன்று, சுயநலம் கருதாமல் செயல்படுவீர்கள் பணிகளில் கூடுதல் நேர்த்தி நிறைந்திருக்கும் தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற, தேவையான வசதி கிடைக்கும். தாராள பணவரவு வருவதால், மனதில் கூடுதல் நம்பிக்கை வளரும். வெகுநாள் வாங்க நினைத்த பொருளை வாங்குவீர்கள்.

கன்னி
இன்று, உங்கள் செயலில் பொறுமையும், புத்திசாலித்தனமும் கலந்திருக்கும். தொழில் வளம் பெற, அனுகூலகாரணி பலம் பெறும். பணவரவில் திருப்திகரமான நிலை உண்டு. நண்பரின் தேவைகளுக்கு இயன்ற அளவில் உதவுவீர்கள். குடும்பத்தில் மங்கள நிகழ்வு உண்டாகும்.

துலாம்
இன்று, உங்களிடம் நன்கு பழகியவரும், அதிருப்தி பெறுகிற சூழ்நிலை உருவாகலாம். பேச்சில் நிதானம் வேண்டும். தொழில், வியாபாரத்தில் மூலதன தேவை அதிகரிக்கும். நிலுவை பணவரவு கிடப்பதில் கால தாமதம் இருக்கும். அதிக பயன் தராத பொருட்களை, நிர்பந்தத்தின் பேரில் வாங்க வேண்டாம்.

விருச்சிகம்
இன்று, உங்களிள் சுய தேவையை பூர்த்தி செய்ய, மனம் விரும்பும். சுற்றுச்சூழ்நிலை உணர்ந்து, செயல்பட வேண்டும். அதிக முயற்சியால் மட்டுமே, தொழில் சார்ந்த சிரமத்தை சரி செய்யலாம். தகுதிக்கு மீறிய அளவில் செலவு செய்வதை தவிர்க்கவும். வாகன பயனத்தில் மித வேகம் நல்லது.

தனுசு
இன்று, உங்கள் செயல்களில் புதிய அணுகுமுறையை பின்பற்றுவீர்கள். புதியவர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழில், வியாபார வளர்ச்சியில், மனம் மகிழத்தக்க சாதனை உருவாகும். உபரி பணவரவில் சேமிப்பை உயர்த்துவீர்கள் இஷ்ட தெய்வ வழிபாடு நிறைவேறும்.

மகரம்
இன்று, உங்கள் உறவினர், நண்பர்களிடம் கூட பேசுவதில், நிதான நடைமுறை வேண்டும். புதிய பணிகள் உருவாகி, மனதை சஞ்சலப்படுத்தும். தொழில் இலக்கை கவனமுடன் நிறைவேற்றுவதால், சிரமம் வராமல் தவிர்க்கலாம். பிறர் பார்வையில் படும்படி அதிக அளவில் பணச்செலவு செய்யக் கூடாது. உணவுப்பொருள் தரம் அறிந்து உண்பது நல்லது.

கும்பம்
இன்று, உங்கள் குடும்ப பொறுப்புகளை நிறைவேற்றுவதில், அதிக ஆர்வம் கொள்வீர்கள். உறவினர்களின் உதவி, எதிர்பார்த்தபடி கிடைக்கும். தொழில் வளம் சிறந்து, உபரி பணவரவு வரும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை உயரும். வீட்டு சாதனப் பொருள் வாங்குவீர்கள்.

மீனம்
இன்று, உங்கள் மனதில் தைரியக் குறைவு, செயலில் சுணக்கம் ஏற்படலாம். புது உத்வேகத்துடன் செயல்படுவதால், நல்ல பலன் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில், அளவான மூலதனம் போதும். நண்பர்களிடம் இனிய நினைவுகளை பகிர்ந்து கொள்வீர்கள். ஒவ்வாத உணவு உண்ணக் கூடாது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer