Friday, November 28, 2014

மேஷம்
இன்று, உங்கள் மனதில் இருந்த அலட்சிய சிந்தனை விலகும். வாழ்வில் முன்னேற புதிய வாய்ப்புகளை தேடுவீர்கள். திறமைமிகு உழைப்பால், தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும். கிடைக்கிற கூடுதல் பணவரவை முக்கிய செலவுகளுக்கு பயன்படுத்துவீர்கள். விரும்பிய உணவை அதிகம் உண்பதால், அஜீரணக்கோளாறு ஏற்படலாம்.

ரிஷபம்
இன்று, கடந்த காலத்தில் திட்டமிட்ட செயலை, உற்சாகத்துடன் துவங்குவீர்கள். இடையூறுகளை சரி செய்ய புதிய யுக்தி உருவாகும். தொழில், வியாபாரம் சிறக்க, மாற்றாரும் உதவுகிற நிலை உண்டு. தாராள பணவரவு பெறுவீர்கள். சுப நிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள்.

மிதுனம்
இன்று, உங்களை நிர்பந்தம் செய்து, சிலர் சாதகமாக பயன்படுத்த எண்ணுவர். எந்த சூழ்நிலையிலும் அவர்களுக்கு துணை போக வேண்டாம். தொழிலில் உற்பத்தி, விற்பனை சீராக புதிய நடைமுறை உதவும். பணவரவு குறைவதால் சேமிப்பை பயன்படுத்துவீர்கள். அதிக விலையுள்ள பொருள் இரவல் கொடுக்க, வாங்க கூடாது.

கடகம்
இன்று, நிறைவேற்ற வேண்டிய பணிகளை உத்வேகமுடன் செயல்படுத்துவீர்கள். பெரும்பான்மை பணிகள் பூர்த்தியாகும். தொழில் வளர்ச்சி பெற, தெய்வ அருள் துணை நிற்கும். அதிக பணவரால், மனதில் குதுாகலம் ஏற்படும். பொன், பொருள் சேரும்; குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

சிம்மம்
இன்று, உங்கள் பேச்சுக்கு நண்பர், உறவினரிடம் கூடுதல் வரவேற்பு கிடைக்கும். சிலரிடம், உங்களுக்கு இருந்த அதிருப்தி எண்ணங்களை குறைத்துக் கொள்வீர்கள். இலக்கு நிறைவேறி, உபரி பணவரவை பெற்றுத் தரும். வெகுநாள் வாங்க நினைத்த பொருளை வாங்குவீர்கள்.

கன்னி
இன்று, உங்கள் செயல்களில் இருந்த சுணக்க நிலை, மெல்ல மெல்ல சரியாகும். உத்வேகமுடன் செயல்பட துவங்குவீர்கள். தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத அளவில் வரவேற்பு கிடைக்கும். சராசரி பணவரவுடன், நிலுவைப் பணமும் வசூலாகும். நீண்ட கால பணக்கடனை கொஞ்சம் அடைப்பீர்கள்.

துலாம்
இன்று, நீங்கள் ஆரவாரம் தவிர்த்து, அமைதியுடன் செயல்பட வேண்டும். அறிமுகம் இல்லாத சிலர், உதவி கேட்டு வரலாம். தொழில் வளம் சிறக்க, மனைவியின் ஆலோசனை பெரிதும் உதவும். பணவரவில் இருந்த சுணக்கநிலை மாறும். வெகுநாள் எதிர்பார்த்த பணக்கடன் கிடைக்கும்.

விருச்சிகம்
இன்று, உங்கள் சிந்தனை, செயலில் புத்துணர்ச்சி ஏற்படும். எந்த விஷயத்தையும் சவாலாக அணுகுவீர்கள். தொழில் வளர்ச்சிப் பணி சிறந்து, முன்னேற்ற பலன் தரும். பணவரவை முக்கிய செலவுகளுக்கு பயன்படுத்துவீர்கள். மனைவி வழி உறவினர் அதிக அன்பு பாராட்டுவர்.

தனுசு
இன்று, நீங்கள் பேசுவதை குறைத்து, செயலில் அதிக கவனம் கொள்வது நல்லது; இதனால், சிலர் உங்களது பொன்னான நேரத்தை வீணாக்குகிற நிலையை தவிர்க்கலாம். தொழிலில் நிலுவைப் பணி நிறைவேற்றுவது நல்லது. கண்களின் பாதுகாப்பில் கவனம் வேண்டும். எதிர்பார்த்த நல்ல செய்தி வர தாமதமாகலாம்.

மகரம்
இன்று, உங்கள் கடந்த காலத்தில் எதிர்மறையாக செயல்பட்டவர், உங்களை நல்லவிதமாக எண்ணுகிற சூழ்நிலை உருவாகும்; இருப்பினும், அவர்களிடம் கவனமுடன் பழகுவது நல்லது. தொழில் வளர்ச்சியில், புதிய பரிமாணம் ஏற்படும். பணம் கொடுக்கல், வாங்கல் சீராகும். குடும்ப உறுப்பினர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள்.

கும்பம்
இன்று, உங்களின் கவனக்குறைவான செயலால், சில சவுகர்யங்களை இழக்க நேரிடலாம்; இருந்தாலும், மாற்று வழிகளுக்கான சூழ்நிலைகளை உணருவீர்கள். தொழில், வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் நட்பு பாராட்டுகிற ஒருவர், உங்களுக்கு உதவ முன் வருவார்.

மீனம்
இன்று, நீங்கள் துவங்குகிற செயல் இனிதாக நிறைவேறும். மனதில் மகிழ்ச்சி, தன்னம்பிக்கை அதிகரிக்கும். தொழில், வியாபாரம் சிறக்க, கூடுதல் மூலதனம் செய்வீர்கள். வளர்ச்சியும், வருமானமும் கூடும். நண்பர், உறவினர்களுக்கு இயன்ற அளவில் உதவுவீர்கள்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer