மேஷம்
அடுத்தவர் நலனில் அக்கறை செலுத்தி மகிழும் நாள். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் அகலும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். பூர்வீக சொத்துப் பிரச்சினை நல்ல முடிவிற்கு வரும்.
ரிஷபம்
பணத் தேவைகள் பூர்த்தியாகும் நாள். வியாபாரம் தொழிலை விரிவுபடுத்தும் எண்ணம் மேலோங்கும். குடும்பத்தினருடன் குதூகலப் பயணமொன்றை மேற்கொள்வீர்கள். தேக ஆரோக்கியம் சீராகும்.
மிதுனம்
ஆனந்தம் அதிகரிக்க ஆலய வழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய நாள். எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செய்வது நல்லது. பயணங்களைத் தள்ளி வைப்பீர்கள். விரயங்கள் அதிகரிக்கும்.
கடகம்
எடுத்த காரியத்தை எளிதில் முடித்து வெற்றி காணும் நாள். உறவினர்களுக்கு உதவி செய்து மகிழ்வீர்கள். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்து மகிழ்வீர்கள். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் மேலோங்கும்.
சிம்மம்
மதி நுட்பத்தால் மகத்தான காரியங்களைச் செய்யும் நாள். போட்டி பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். இடமாற்றங்களை உறுதி செய்து கொள்வீர்கள். பாதியில் நின்ற பணிகளை மீதியும் தொடருவீர்கள்.
கன்னி
மனமாற்றங்கள் ஏற்படும் நாள். மகிழ்ச்சிக்குரிய விதத்தில் வருமானங்கள் வந்து சேரும். பிள்ளைகளின் சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும். தொழில் முயற்சிக்கு மாற்றினத்தவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும்.
துலாம்
செல்வந்தர்களின் உதவியால் சிந்தை மகிழும் நாள். வருங்கால நலன் கருதி புதிய திட்டமொன்றைத் தீட்டுவீர்கள். தாய்வழித் தனலாபம் கிடைக்கும். பூர்வீகச் சொத்துக்களால் ஏற்பட்ட வில்லங்கங்கள் அகலும்.
விருச்சகம்
தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும் நாள். தொகை எதிர்பார்த்தபடி வந்து சேரும். புதிய பொருள் சேர்க்கை உண்டு. அலுவலகப் பணிகள் துரிதமாக நடைபெறும். பயணத்தால் பலன் உண்டு.
தனுசு
தாராளமாகச் செலவிட்டு மகிழும் நாள். நட்புவட்டம் விரிவடையும். மாற்று இனத்தவர்கள் மகிழ்ச்சிக்குரிய செய்தியைக் கொண்டுவந்து சேர்ப்பர். கூட்டுத் தொழில் தனித் தொழிலாக எடுத்த முயற்சி கைகூடும்.
மகரம்
மனக்குழப்பம் அகல மாற்று இனத்தவரை நாடும் நாள். பேச்சுத் திறமையால் பிரபலஸ்தர்களிடம் காரிமொன்றைச் சாதித்துக் கொள்வீர்கள். விட்டுப்போன வரன்கள் மீண்டும் வந்து சேரலாம்.
கும்பம்
விரயங்கள் ஏற்படாதிருக்க விழிப்புணர்ச்சி தேவைப்படும் நாள். புண்ணிய காரியங்களில் ஆர்வம் காட்டுவீர்கள். மன அமைதிக்காக மற்றவர்களிடம் உங்கள் பிரச்சினைகளைச் சொல்வீர்கள்.
மீனம்
வாய்ப்புகள் வந்து சேரும் நாள். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும். சொன்ன சொல்லைக் காப்பாற்றுவீர்கள். வெளிநாட்டுப் பயண முயற்சிகள் கைகூடுவதற்கான அறிகுறி தோன்றும்.
Thursday, November 27, 2014
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment