இஸ்லாமிய மதத்தை அவமதித்ததாக பாகிஸ்தான் நடிகை வீணா மாலிக் என்பவருக்கு 26 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம், நடிகை வீணா மாலிக் மற்றும் அவரது கணவர் பஷீர்(Basheer) ஆகியோர் நடித்த நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பட்டது.
அப்போது அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வது போன்ற ஒரு காட்சியின்போது, இஸ்லாம் மத பாட்டு ஒன்று பின்னணியில் ஒளிபரப்பப்பட்டது.
இதை தொடர்ந்து அங்கு உள்ள மத அடிப்படைவாதிகள் பலரும் இந்நிகழ்ச்சி எதிர்ப்புத் தெரிவித்தது மட்டுமின்றி நீதிமன்றங்களில் மனுக்களும் தாக்கல் செய்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வந்த போது, அவர்கள் மதத்தை அவமதித்து விட்டதாகக் கூறப்பட்டது.
எனவே தொலைக்காட்சி நிறுவன உரிமையாளர் மிர் ஷகில் உர் ரஹ்மான்(Shakeel ur Rehman), நடிகை வீணா மாலிக், பஷீர் மற்றும் அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ஷைஸ்டா வாகிதி(Shaista Vaagithi) ஆகியோருக்கு 26 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 7 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சி எதிர்ப்பு வந்தவுடன், அந்த தொலைக்காட்சி நிறுவனம் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டது குறிப்பிடத்தக்கது.
Saturday, November 29, 2014
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment