Friday, November 28, 2014

பெங்களூரில் கைது செய்யப்பட்ட திருநங்கைகளை பிச்சைக்காரர்களுடன் பொலிசார் தங்க வைத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 3 தின‌ங்களாக பெங்களூருவில் பிச்சை எடுத்த 300-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ள‌னர்.

இதில் 43 பேர் திருநங்கைகள். கைதான அனைவரையும் பொலிசார் மாகடி சாலையில் உள்ள பிச்சைக்காரர்கள் காலனியில் அடைத்துள்ளனர்.

மேலும் பல்வேறு வழக்குகளின் கீழ் சுமார் 200 திருநங்கைகள் கைது செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

இதனைக் கண்டித்து திருநங்கைகளும், பல்வேறு மனித உரிமை ஆர்வலர்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட் டுள்ளனர்.

இதற்கு விளக்கமளித்த பெங்களூர் மாநகர காவல் ஆணையர் எம்.என்.ரெட்டி கூறியதாவது, திருநங்கைகளுக்கு எதிராக பொலிசார் செயல்படுவதாக கூறுவது தவறு.

சாலையில் பிச்சை எடுத்தவர்களை சட்டப்படி கைது செய்து பிச்சைக்காரர்கள் காலனியில் உள்ள மறுவாழ்வு மையத்தில் சேர்த்துள்ளோம் என்றும் பிச்சைக்காரர்கள் தடுப்பு சட்டத்தின்படி திருநங்கைகள் கைது செய்யப்பட்டு, பிச்சைக்காரர்களுடன் அடைத்து வைத்திருப்பது சட்டப்படி சரியே எனவும் தெரிவித்துள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer