Thursday, October 30, 2014

நிமிர்ந்து நில் படத்துக்கு பிறகு சமுத்திரகனி இயக்கி, நடித்து வரும் படம் கிட்னா. இதில் சமுத்திரகனியுடன் தன்ஷிகா, மஹிமா, அகிலா கிஷோர், சூரி, கஞ்சா கருப்பு நடிக்கிறார்கள். இதன் முதல் முன்னோட்டம்...*பிரபல எழுத்தாளர் சு.தமிழ்செல்வி எழுதிய கீதாரி என்ற நாவலின் திரை வடிவம்தான் கிட்னா. இந்த நாவல் மலைவாழ் மக்களின் வாழ்க்கையை மையமாக கொண்டது. அவரிடம் ரைட்ஸ் வாங்கி படமாகிறது.

*மலைவாழ் மக்கள் மனிதாபிமானத்தோடு வாழ்கிறவர்கள், ஊர் மக்கள் அதை இழந்தவர்கள். இதைபற்றி பேசும் படம். "முடிஞ்ச வரைக்கும் நல்லது செய்யுங்க"ன்னு சொல்ற படம்.

*கிட்ணா படத்தில் பைபிள் வசனங்கள் பயன்படுத்தப்படுவதால் டைட்டிலுக்கு கீழ் குட் செப்பர்ட் என்ற சப் டைட்டில் ஒன்று போடப்படுகிறது.
*மலைவாழ் நடுத்தர வயதுகாரராக நடிக்கிறார் சமுத்திரகனி. அவரது கேரக்டரின் பெயர் கிட்னா. அவரது மனைவியாக தன்ஷிகா நடிக்கிறார்.

*சாட்டை மஹிமா இரண்டு வேடங்களில் நடிக்கிறார். கதை திரைக்கதை வசனம் இயக்கம் பட ஹீரோயின் அகிலா கிஷோர் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். சூரி, கஞ்சா கருப்பு காமெடியாக இல்லாமல் கதையின் முக்கிய கேரக்டர்களில் நடிக்கிறார்கள்.
*28 வயது முதல் 68 வயது வரையிலான கிட்னாவின் வாழ்க்கையை சொல்லும் படம். இதில் சமுத்திரகனிக்கு 3 கெட்-அப்புகள். தன்ஷிகாவுக்கு 4 கெட்-அப்புகள். மற்ற எல்லோருக்கும் இரண்டு கெட்-அப்புகள்.

*மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் முதல்கட்ட படப்பிடிப்புகள் முடிந்திருக்கிறது. ஒரு வருடம் வரை படப்பிடிப்பு நடக்கும். 2015ம் ஆண்டின் பிற்பகுதியில் படம் ரிலீசாகும்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer