Wednesday, October 29, 2014

கத்தி திரைப்படத்தின் க்ளைமேக்ஸுக்கு சில காட்சிகள் முன்பு வீராவேசமாக விஜய் பேசும் சில நிமிட வசனம் தான் கத்தி படத்தின் வெற்றிக்கு அச்சாணி எனலாம். மக்களின் பிரச்சனையை மக்களின் ஒருவனாக நின்று கதிரேசன் பேசும் அந்த வசனம் விஜய்யின் ரசிகர்கள் மட்டுமல்லாது பொதுமக்களிடையேயும் அவரது இமேஜை உயர்த்தியது.

ஆனால் அந்த வசனமே தற்போது விஜய்யை மட்டுமில்லாது கத்தி படக்குழுவையே பிரச்சனைக்குள்ளாக்கியிருக்கிறது. மத்திய அரசையோ மாநில அரசையோ திருப்திபடுத்துவதறாக பேசப்பட்டதாக சொல்லப்படும் 2G ஊழல் பற்றிய வசனங்கள் தான் கத்தி படத்திற்கு கிடுக்கிப்பிடி போட்டுள்ளன. ’நீதிமன்றத்தின் விசாரணையில் இருக்கும் ஒரு வழக்கைப் பற்றி ஒரு திரைப்படத்தில் எப்படி வசனங்கள் இடம்பெறலாம்? இது நீதுமன்ற அவமதிப்பு’ என்று கூறி மதுரை நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

படத்தில் வசனம் பேசி நடித்த விஜய், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், தயாரிப்பு நிறுவனமான லைக்கா  ஆகியோரின் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. கத்தி படத்தின் வெற்றியை கொண்டாடிவரும் விஜய் இந்த வழக்கை எந்த முறையில் சந்திக்கப் போகிறார் என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer