Wednesday, October 29, 2014

அர்ஜென்டினா கால்பந்து அணியின் முன்னாள் ஜாம்பவான் மாரடோனா, தனது காதலி ரோசியோ ஒலிவாவை சரமாரியாக அடிக்கும் காணொளி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த காணொளியில் ஒரு சோபாவில் மாரடோனா அமர்ந்திருக்கிறார். அவருக்கு எதிர் புற சோபாவில் ரோசியோ உட்கார்ந்திருக்கிறார்.

இவரது கையில் கமெரா செல்போன் உள்ளது. அவர் அதில் எதையோ பார்த்துக் கொண்டிருக்கிறார். அப்போது திடீரென எழுந்து சென்ற மாரடோனா, தனது காதலியை நோக்கி சென்று அவரை அடிக்கிறார்.

மேலும் தனது காதலியை பார்த்து ஸ்பெயின் மொழியில் ”உன் போனையே பார்த்துக் கொண்டிரு, உன் போனையே பார்த்துக் கொண்டிரு” என்று கோபமாகவும் மாரோனா சத்தம் போடுகிறார்.

மாரடோனாவின் செயலால் அதிர்ச்சி அடைந்த ரோசியோ, ”உனக்கு என்னாச்சு, பைத்தியம் பிடித்து விட்டதா, அடிக்காதே நிறுத்து.. நிறுத்து” என்று அலறுகிறார். இந்த காட்சியை ரோசியோ வீடியோவில் படமாக்கியுள்ளார்.

அக்டோபர் மாதத் தொடக்கத்தில் துபாயிலிருந்து பியூஸ் அயர்ஸ் திரும்பியிருந்தார் மாரடோனா. அந்த சமயத்தில் தான் அவரது வீட்டில் வைத்து இந்த தாக்குதல் நடந்திருக்கலாம் என்று தெரிகிறது.

இந்த காணொளி காட்சி இப்போது தான் முதன்முறையாக வெளியாகியுள்ளது. இதை தென் அமெரிக்காவின் டிவி ஒன்று ஒளிபரப்பியுள்ளது.

இதுபற்றி மாரடோனா கூறுகையில், நான் ரோசியோ வைத்திருந்த போனைத் தட்டித்தான் விட்டேன். என் பிள்ளைகள் மீது சத்தியமாக கூறுகிறேன், நான் ஒரு பெண்ணை அடிக்கும் அளவுக்கு மோசமானவன் இல்லை என்று கூறியுள்ளார்.

தற்போது ரோசியோவை விட்டு மாரடோனா பிரிந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer