Thursday, October 30, 2014

அமெரிக்காவை சேர்ந்த நடிகை ஒருவரை ஆண்கள் தகாத வார்த்தைகளால் பேசுவது போன்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெருக்களில் பெண்களுக்கு இழைக்கப்படும் துன்புறுத்தலுக்கு தீர்வு காண தன்னார்வ தொண்டு நிறுவனமான ஹோலபேக்(Hollaback) முயன்றுள்ளது.

எனவே இதை செயல்படுத்தும் விதமாக ரகசிய கமெரா ஒன்றை அமெரிக்காவின் பிரபல நடிகையான ஷோஷானா பீ. ராபர்ட்ஸின்(Shoshana B. Roberts) உடையில் பொருத்தி, அவரை சுமார் 10 மணிநேரம் நியூயோர்க் (Newyork) நகரின் தெருக்கில் உலாவ விட்டுள்ளனர்.

அப்போது அவரை வழி எங்கிலும் சில ஆண்கள் கேலியும், கிண்டலும் செய்த வண்ணம் உள்ளனர். மேலும் 100க்கும் மேற்பட்ட தகாத வார்த்தைகளில் பேசி துன்புறுத்துவதும் வீடியோவில் பதிவாகியுள்ளது.

இதுகுறித்து ஹோலபேக் நிறுவனத்தின் தயாரிப்பாளர்கள் கூறுகையில், ஷோஷானா சென்ற வீதிகளில் சிலர் தகாத செயல்களில் ஈடுபட்டதை இந்த வீடியோவில் இருந்து நாங்கள் நீக்கிவிட்டோம் என்றும் இதேபோல் தினந்தினம் எத்தனையோ பெண்கள் பல்வேறு துன்புறுத்தல்களுக்கும், இன்னல்களுக்கும் ஆளாவதை சுட்டிக்காட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த வீடியோவை தயாரித்தோம் எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்த வீடியோ பிரபலமானதையடுத்து, வீடியோவில் தோன்றிய நடிகைக்கு கற்பழிப்பு, கொலை மிரட்டல்கள் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து நடிகை கூறுகையில், இந்த வீடியோ குறித்து பலரும் எனக்கு நேர்மறையான செய்திகளை அனுப்பியிருந்தனர். சிலர் மட்டும் கொலை மற்றும் கற்பழிப்பு மிரட்டல்களை விடுத்துள்ளனர். நான் பாதுகாப்பாக உணரவில்லை, புகார் தெரிவிக்கும் முடிவில் இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer