Thursday, October 30, 2014

அல்கொய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடனை கொன்ற நபர், விரைவில் தன்னை வெளியுலகுக்கு அடையாளம் காட்டவுள்ளார்.

கடந்த 2011ம் ஆண்டில் பாகிஸ்தானின் அபோதாபாத்தில் (Abbottabad) உள்ள ரகசிய வீட்டில் பதுங்கி வாழ்ந்து வந்த பின்லேடனை அமெரிக்க ராணுவத்தினர் வீடு புகுந்து தாக்குதல் நடத்தி சுட்டு கொன்றனர்.

இதன்பின் பின்லேடனை கடலில் வீசி சமாதி கட்டியதாக அமெரிக்கா அறிவித்தது. ஆனால் இதுவரை பின்லேடனை கொன்ற நபர் யார் என்ற விவரத்தையும், யாரெல்லாம் அந்த தாக்குதலில் ஈடுபட்டனர் என்பதையும் அமெரிக்கா வெளியிடவில்லை.

இந்நிலையில் பின்லேடனை நேருக்கு நேர் சுட்டுக் கொன்ற வீரர் தனது அடையாளத்தை அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சி ஒன்றின் மூலம் முதல் முறையாக வெளியுலகத்துக்கு காட்டுவதற்காக முன்வந்துள்ளார்.

இதுகுறித்து அந்த தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது, "The Man Who Killed Osama Bin Laden" என்ற ஆவணப்படம் 2ம் பாகமாக நவம்பர் 11 மற்றும் 12 ஆகிய இரு நாட்கள் ஒளிபரப்பாகும்.

அப்போது சம்பந்தப்பட்ட வீரர் பின்லேடன் கொல்லப்பட்டதில் தனது பங்கு குறித்தும், பின்லேடனுடன் நடந்த மோதலின் பரபரப்பு தருணங்கள் மற்றும் சாகும் முன்பு பின்லேடன் பேசியது பற்றியும் பகிர்ந்துக்கொள்ள போகிறார் என கூறியுள்ளது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer