Wednesday, October 29, 2014

நடிகர் ஜீவாவுக்கு கையில் ஒரு படமும் இல்லை. ‘யான்’ படம் வெளிவருவதற்கு முன்பு சுமார் அரை டஜன் தயாரிப்பாளர்கள் அவரை சுற்றி சுற்றி வந்தார்கள்.

அவர்களிடம், ‘யான் வரட்டும். பிறகு பார்க்கலாம்’ என்று கூறிவந்தார் அவர். ஆனால் யான் வந்தது. ஏன் வந்தது? என்கிற கொடும் நிலைமைக்கு தள்ளிவிட்டு போனது ஜீவா ரசிகர்களை. இப்போது ஜீவாவே போன் பண்ணி தயாரிப்பாளர்களை அழைக்கிறார். ஆனால் அத்தனை பேரும் எஸ்கேப். நாலு கோடி சம்பளம் வேணும் என்று அடங்காத ஆசையோடு திரிந்த ஜீவா, யான் படம் மூலம் தயாரிப்பாளருக்கு ஏற்படுத்திய நஷ்டம் பத்து கோடிக்கும் மேல். ஆசையே அலை போல. தோல்வியோ தலை மேல!

முக்கிய குறிப்பு. முன்பெல்லாம் கதைகளை தான் மட்டுமே கேட்டு வந்த ஜீவா, மீண்டும் பழைய ஸ்டைலுக்கு மாறிவிட்டார். யெஸ்... அப்பா ஆர்.பி.சவுத்ரியிடம் கதை சொல்ல அனுப்புகிறாராம். அவர் நல்லாயிருக்கு என்று சொன்னால்தான் அடுத்த ஸ்டெப் வைப்பது என்கிற முடிவுக்கும் வந்திருக்கிறார். எல்லாம் சரி. படமெடுக்க தயாரிப்பாளர் இல்லையே? அதையும் அப்பாவையே ஏற்பாடு பண்ண சொல்லுங்க ஜீவா.

0 comments :

Post a Comment

 
Toggle Footer