Thursday, October 30, 2014

அமெரிக்காவில் நபர் ஒருவர் சிங்கம், புலி மற்றும் சிறுத்தையுடன் வாழ்ந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை சேர்ந்த கார்ல் போவார்ட்(43), என்ற நபர் தனது ஒரு கண்ணின் பார்வையில் குறைபாடுள்ளவர். இவர் 6 புலிகள், 2 சிங்கம் மற்றும் சிறுத்தை ஒன்றுடன் தினமும் வாழ்ந்து வருகின்றார்.

மேலும் 2 கரடிகளையும், 2 முதலைகளையும் வளர்த்து வருகிறார். தினமும் விலங்குகளுடன் விளையாடி மகிழும் கார்ல், தன்னுடைய அனுபவம் பற்றி மக்கள் அறிந்து கொள்ள பேட்டி ஒன்றையும் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், மிருகங்களுடன் பழகுவது ஆபத்தானாவை என்பதால் நான் எப்போதும் எச்சரிக்கையுடன் இருக்கிறேன் என்றும் குறிப்பாக அவற்றுக்கு இறைச்சி உணவு அளிக்கும் போது மிகவும் விழிப்புடன் இருப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.

கடந்த 13 வருடங்களுக்கு முன்பு சிறுத்தை குட்டிகளை வாங்கிய கார்ல், தனது வீட்டின் பின்புறமே விலங்கியல் பூங்காவை அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer