Thursday, October 30, 2014

தமிழகத்தை சேர்ந்த ஐந்து மீனவர்கள் உட்பட எட்டு பேருக்கு தூக்கு தண்டனை விதித்து கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடத்தைச் சேர்ந்த பிலாடுதீன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் கடந்த 2011ஆம் ஆண்டு நவம்பர் 28ஆம் திகதி மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் 5 பேரை போதை பொருள் கடத்தியதாக இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கு, கடந்த மூன்று ஆண்டுகளாக கொழும்பு உயர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், நீதிபதி பத்மா சூரசேன இன்று தீர்ப்பு வழங்கினார்.

இதில், தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர்கள் எமர்சன், வில்சன், அகஸ்டன், லாங்லெட், பிரசாந்த் ஆகிய 5 பேர் உள்பட இலங்கையைச் சேர்ந்த மூன்று மீனவர்களுக்கும் தூக்குத் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் நவம்பர் 14ம் திகதிக்குள் இலங்கை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இத்தீர்ப்பால் அதிர்ச்சியில் உறைந்துள்ள மீனவர் குடும்பத்தினர், உடனடியாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer